1முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் மதுரையில் துவக்கி வைத்தார்.
1முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் மதுரையில் துவக்கி வைத்தார். நெல்பேட்டை ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் உணவு பரிமாறி மாணவர்களுடன் அமர்ந்து முதல்வர் சாப்பிட்டார்.
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கவும், கற்றல் இடைநிற்றலை தவிர்க்கவும் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, சில மாநகராட்சிகள், நகராட்சிகள், தொலைதூர கிராமங்களில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு முதல்கட்டமாக அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் காலையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு, அதற்கான வழிகாட்டுதல்களுடன் அரசாணைகள் வெளியிடப்பட்டன.
இந்நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை மதுரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தொடங்கி வைத்தார். அண்ணா பிறந்த தினத்தை முன்னிட்டு நெல்பேட்டை, ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது, மாணவர்களுடன் அமர்ந்து முதல்வர் சாப்பிட்ட போது தனது அருகில் அமர்ந்திருந்த மாணவ, மாணவிகளுக்கு காலை உணவை முதல்வர் ஸ்டாலின் ஊட்டி விட்டார்.