மகளிருக்கு இலவச பயணம்.. ரூ.600 முதல் ரூ.1200 வரை சேமிக்கின்றனர்.. முதலமைச்சர் பெருமிதம்..

Published : May 13, 2022, 03:50 PM IST
மகளிருக்கு இலவச பயணம்.. ரூ.600 முதல் ரூ.1200 வரை சேமிக்கின்றனர்.. முதலமைச்சர் பெருமிதம்..

சுருக்கம்

பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம் மூலம் ஓவ்வொருக்கும் சராசரியாக 600 ரூபாயிலிருந்து 1200 ரூபாய் வரை மிச்சமாகக்கூடிய சாதனையை இந்த ஆட்சி செய்திருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்தத் திட்டத்தால், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியிலனப் பெண்கள் அதிகளவில் பயன்பெறும் வகையில் நிறைவேற்றுப்பட்டு வருகின்றது என்றும் அவர் கூறியுள்ளார். 

பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம் மூலம் ஓவ்வொருக்கும் சராசரியாக 600 ரூபாயிலிருந்து 1200 ரூபாய் வரை மிச்சமாகக்கூடிய சாதனையை இந்த ஆட்சி செய்திருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்தத் திட்டத்தால், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியிலனப் பெண்கள் அதிகளவில் பயன்பெறும் வகையில் நிறைவேற்றுப்பட்டு வருகின்றது என்றும் அவர் கூறியுள்ளார். 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். ராஜா இல்லத் திருமண விழா சென்னையில் இன்று நடைபெற்றது.  பின்னர், முதலமைச்சர் பேசுகையில், "திமுக ஆட்சி அமைந்த பிறகு, தமிழகத்தில் எப்படிப்பட்ட சூழ்நிலை உருவாக்கியிருக்கிறது, சாதனைகள் மட்டுமல்ல, ஏற்கனவே நடைபெற்றுக் கொண்டிருந்த சோதனைகளுக்கும் முடிவு கட்டியிருக்கிறோம். அதேபோல சட்டம்-ஒழுங்கை பேணிப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறோம்.

நான்‌ சட்டமன்றமாக இருந்தாலும்‌, மக்கள்‌ மன்றமாக இருந்தாலும்‌ அல்லது அதிகாரிகளை அழைத்துப்‌ பேசக்கூடிய கூட்டங்களாக இருந்தாலும்‌, ஆய்வு நடத்தக்கூடிப கூட்டங்களாக இருந்தாலும்‌, பொது நிகழ்ச்சிகளாக இருந்தாலும்‌ தொடர்ந்து நான்‌ சொல்லிக்‌ கொண்டிருப்பது இது என்னுடைய ஆட்சி என்று நான்‌ சொல்லமாட்டேன்‌, நம்முடைய ஆட்சி என்று தான்‌ நான்‌ சொல்வேன்‌ என்ற
அடிப்படையில்‌, தேர்தல்‌ நடைபெற்று, வாக்குகள்‌ எண்ணப்பட்டு, முடிவுகள்‌ அறிவிக்கப்படும்‌ நேரத்தில்‌ பத்திரிகையாளர்களிடத்தில்‌ பேசுகிறபோது கூட நான்‌ குறிப்பிட்டுச்‌ சொன்னேன்‌, வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல,
வாக்களிக்காதவர்களுக்கும்‌ நன்மை செய்யக்கூடிய ஆட்சியாக நம்‌ ஆட்சி இருக்கும்‌ என்று நான்‌ சொன்னேன்‌. வாக்களித்தவர்கள்‌ மகிழ்ச்சி அடையக்கூடிய வகையில்‌, வாக்களிக்கத்‌ தவறியவர்கள்‌ இவர்களுக்கு வாக்களிக்காமல்‌ போய்விட்டோமே என்று வருத்தப்படக்கூடிய அளவிற்கு நாம்‌ ஆட்சியை நடத்துவோம்‌ என்று நான்‌ உறுதியாக எடுத்துச்‌ சொன்னேன்‌. அதைத்தான்‌ இன்றைக்கு நிறைவேற்றிக்‌ கொண்டிருக்கிறோம்‌.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஓராண்டு காலம்தான் முடிந்திருக்கிறது. ஆனால் இந்த ஓராண்டு காலத்தில் 10 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்தால் எதை சாதிக்க முடியுமோ அதைவிட பல மடங்கு சாதனையை இன்றைக்கு நாம் சாதித்துக் காட்டியிருக்கிறோம்.நாம் செய்திருக்கக்கூடிய சாதனைகளில் ஒரு மிகப்பெரிய, ஒரு அளப்பறிய சாதனை என்னவென்று சொன்னால், மகளிருக்கு வழங்கப்பட்டிருக்கக்கூடிய பேருந்து கட்டண சலுகை.

இந்தத் திட்டத்தால், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியிலனப் பெண்கள் அதிகளவிற்கு பயன்பெறக்கூடிய அளவிற்கு திட்டம் இன்றைக்கு நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. வேலைக்குப் போகக்கூடிய பெண்களின் அன்றாடச் செலவில் பெரும் சுமையை நாம் குறைத்து இருக்கிறோம். அதாவது நான் புள்ளிவிவரத்தோடு சொல்ல வேண்டுமென்றால், ஒவ்வொரு பெண்ணுக்கும் சராசரியாக 600 ரூபாயிலிருந்து 1200 ரூபாய் வரை மிச்சமாகக்கூடிய சாதனையை நாம் செய்து முடித்திருக்கிறோம். ஆக இப்படி மிச்சமாகும் பணத்தைச் சேமித்து வைத்து அந்தப் பெண்கள் அதை என்ன செய்வதாக சொல்கிறார்கள் என்றால், அன்றாடச் செலவிற்கு இல்லை என்ற நிலையில் இருக்கும் பெண்கள் சேமிக்கக்கூடியவர்களாக ஆகியிருக்கிறார்கள் என்று பெருமையோடு சொல்லக்கூடிய அளவிற்கு இன்றைக்கு அவர்கள் முன்னேறியிருக்கிறார்கள்.

நாங்கள் போட்ட கையெழுத்தின் காரணமாக எத்தனை கோடி மக்கள் பயன்பெற்றிருக்கிறார்கள் என்று சட்டப்பேரவையில் நான் புள்ளிவிவரத்தோடு எடுத்துச் சொல்லியிருக்கிறேன். இப்படி கோடிக்கணக்கான மக்களின் வாழ்வில் ஒளியேற்றிய ஆட்சிதான் நம்முடைய ஆட்சி, திமுக ஆட்சியாக இன்றைக்கு நடந்துகொண்டிருக்கிறது" என்று கூறினார். இந்த விழாவில், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் படிக்க: பேருந்து கட்டணத்தை தமிழக அரசு உயர்த்துகிறதா? இபிஎஸ் கூறும் அதிர்ச்சி தகவல்..

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Rajini Speech: ரஜினிகாந்த் பேசியதால் பரபரப்பான 10 சம்பவங்கள்... இன்னும் மறக்காத தமிழகம்! ஒரு சுவாரஸ்யமான லிஸ்ட்.!
TASMAC Issue: "மதுவிலக்கு இல்லையா? அப்படின்னா குறைந்தபட்சம் தரமான சரக்காவது கொடுங்க!" – விஜய் அரசுக்கு மக்கள் வைக்கும் 7 கோரிக்கைகள்