நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திமுகவை கடுமையாகச் சாடினார். 1989ம் ஆண்டு மார்ச் 25-ம் தேதி தமிழக சட்டமன்றத்தில் ஜெயலலிதாவின் சேலை இழுக்கப்பட்டது
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏதேதனும் வாட்ஸ்அப் வரலாற்றை படித்துவிட்டு பேசுவார். அவர் கூறியதைப் போன்ற சம்பவம் தமிழக சட்டப்பேரவையில் நடக்கவில்லை என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திமுகவை கடுமையாகச் சாடினார். 1989ம் ஆண்டு மார்ச் 25-ம் தேதி தமிழக சட்டமன்றத்தில் ஜெயலலிதாவின் சேலை இழுக்கப்பட்டது. அங்கு அமர்ந்திருந்த திமுகவினர் அவரைப் பார்த்துச் சிரித்தனர். அந்த ஜெயலலிதாவை திமுக மறந்துவிட்டதா? அன்றைய தினம் ஜெயலலிதா தான் முதல்வராகும் வரை சட்டப்பேரவைக்கு வரமாட்டேன் என சபதம் எடுத்தார். பின்னர், இரண்டு ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டின் முதல்வராக பதவியேற்றார். இந்தச் செயலில் ஈடுபட்ட திமுக திரௌபதி குறித்து பேச என்ன தகுதி இருக்கிறது என்று நிர்மலா சீதாராமன் காட்டமாகப் பேசினார்.
இந்நிலையில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் இந்த பேச்சுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். பிரபல ஆங்கில நாளேடுக்கு பேட்டியளித்த முதல்வர் ஸ்டாலின் மத்திய நிர்மலா சீதாராமன் ஏதாவது வாட்ஸ் அப் வரலாற்றைப் படித்து விட்டுப் பேசுவார். ஜெயலலிதாவுக்குத் தமிழ்நாடு சட்டமன்றத்தில் அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை. அது ஜெயலலிதாவின் நாடகம் என்பதை அனைவரும் அறிவர். தற்போதைய திருச்சி தொகுதி எம்.பி.யும், முன்னாள் அமைச்சருமான திருநாவுக்கரசர், ஜெயலலிதா தனது போயஸ் கார்டன் இல்லத்தில் ஏற்கனவே ஒத்திகை பார்த்துவிட்டு வந்து நாடகத்தை அரங்கேற்றியதாக சட்டப்பேரவையிலேயே தெரிவித்திருப்பதாகவும் முதலமைச்சர் கூறினார்.
எனவே, நாடாளுமன்ற உரையில் தமிழ்நாடு சட்டப்பேரவை நிகழ்வை பொய்யாக திரித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியது வேதனையளிக்கிறது என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.