சென்னை வருவதை தவிருங்கள்… முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!!

By Narendran SFirst Published Nov 7, 2021, 3:32 PM IST
Highlights

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் சென்னைக்கு வருவதை மக்கள் தவிர்க்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில், 30 மாவட்டங்களில் அதிக அளவில் மழை செய்துள்ளது. அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் 134.20 மி.மீட்டரும் , குறைந்தபட்சமாக அரியலூர் மாவட்டத்தில் 0.20 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது. குறிப்பாக சென்னை நகரில் மிக அதிக அளவு மழை பெய்து வருகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் நேரில் ஆய்வு செய்தார். கொளத்தூர், செல்வி நாகர், சீனிவாசா நகர், பெரம்பூர், பெருமாள்பேட்டை, கொசப்பேட்டை, ஓட்டேரி, அன்னை சத்யா நகர் உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்த மு.கஸ்டாலின், கே.ஆர்.எம் . பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு ரொட்டி, அரிசி, போர்வை  சோப்பு உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டின் கடலோர மவட்டங்களில் , 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்களும், அனைத்து மாவட்டங்களில் 5106 நிவாரண முகாம்களும், பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில், மொத்தம் 160 நிவாரண முகால்களும் அமைக்கப்பட்டு, அதற்கான பொறுப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், பெருகநகர சென்னை  மாநகராட்சி பகுதிகளில் தேக்கியுள்ள மழை நீர், இராட்சத பம்புகள் மூலம் அகற்றப்பட்டு வருவதாகவும் பேரிடர்களின் போது மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்தும் பொருட்டு, தேசிய பேரிடர் மீட்புப் படையின் இரண்டு குழுக்கள் மதுரைக்கும் செங்கக்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டத்திற்கு தலா ஒரு குழுகவும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அதுமட்டுமின்றி தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் இரண்டு குழுக்கள் தஞ்சாவூர் மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தமிழ்நாடு தீயணைப்புத் துறையும், அணைத்து விதமான தேடல் மற்றும் மீட்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளதாக கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மீன்வளத் துறை மூலம் போதுமான படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

சென்னையின் பல பகுதிகளில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டதாக கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை விரைவுபடுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாகவும் மாநிலத்தில் பரவலாக பெய்து வரும் கனமழையின் காரணமாக சாகைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் நீர் தேங்காத வண்ணம் வருவாய்த் துறை, பொதுப்பணித் துறை உள்ளாட்சித துறை அமைப்புகள் முகம் விரைவாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அறிவுறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை உடனடியாக பாதுகாப்பாண மையங்களுக்கு அழைத்துச் செல்வவும், அவர்களுக்கு உணவு மற்றும் தேவையான இதர வசதிகளை செய்து தர உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் தொடர்ந்து மழை பெய்து வரும் கனமழையின் காரணமாகவும், பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையிலும், நாளையும் நாளை மறுநாளும் (08.11.2021 மற்றும் 09.11.2021) ஆகிய இரண்டு நாட்களுக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதாகவும்  தற்போது சென்னை , திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், இந்த மாவட்டங்களில் அமைந்துள்ள அணைகளிலிருந்து உபரி நீர் திறந்து விடப்படுவதாலும், தீபாவளி பண்டிகைக்காக சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு சென்றுள்ள பொது மக்கள் இரண்டு / மூன்று நாட்கள் கழித்து சென்னைக்கு திரும்புமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

click me!