இலைங்கை சிறையில் தமிழக மீனவர்களின் காவல் நீட்டிப்பு... மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!!

Published : Jan 13, 2022, 05:04 PM IST
இலைங்கை சிறையில் தமிழக மீனவர்களின் காவல் நீட்டிப்பு... மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!!

சுருக்கம்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 43 பேரின் காவல் ஜனவரி 27 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது  ஏமாற்றமளிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 43 பேரின் காவல் ஜனவரி 27 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது  ஏமாற்றமளிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடந்த டிசம்பர் மாதம் 18, 19 ஆம் தேதி அன்று, கடலில் மீன்பிடிக்கச் சென்ற ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் எல்லை தாண்டியதாகக் கூறி இலங்கை கடற்படை சிறைபிடித்தது. இதனையடுத்து, சிறைபிடித்துச் சென்ற மீனவர்களை நிற்க வைத்து அவர்கள் மீது இலங்கை அரசு கிருமி நாசினியைப் பீய்ச்சி அடித்தது.

இந்த சம்பவம் ஒரு மனித உரிமை மீறல் என கடும் கண்டனங்கள் எழுந்தன. இதனை கண்டித்து தமிழ்நாட்டு மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டங்களில் ஈடுபட்டனர்.  இந்நிலையில், பொங்கலுக்கு முன் 43 மீனவர்கள் விடுவிக்கப்படுவர் என இலங்கை அரசு கூறியிருந்தது. ஆனால் தற்போது 43 மீனவர்களின் காவல் ஜனவரி 27 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 43 பேரின் காவல் ஜனவரி 27 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது  ஏமாற்றமளிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், இலங்கை சிறையில் உள்ள 43 மீனவர்களின் காவல் நீட்டிக்கப்பட்டிருப்பது ஏமாற்றமளிக்கிறது. மீனவர்களை உடனே விடுவிக்க, மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த டிசம்பர் 19 மற்றும் 20  ஆம் தேதிகளில் இலங்கை கடற்படையினரால் சிறைபிடித்துச் செல்லப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மீனவர்களின் வாழ்வாதாரமான படகுகளையும் விடுவிக்க வேண்டும் என்று கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!