வலுவிழந்த புயலை வலிமையோடு எதிர்த்தோம் என பில்டப் செய்யும் முதல்வர்.. ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்..!

Published : Dec 13, 2022, 12:01 PM IST
வலுவிழந்த புயலை வலிமையோடு எதிர்த்தோம் என பில்டப் செய்யும் முதல்வர்.. ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்..!

சுருக்கம்

டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பல மாவட்டங்களில் விவசாயிகள் உயிருக்கு உயிராக பயிர்களை வளர்த்தார்கள். அந்த பயிர்கள் எல்லாம் சேதாரம் ஆகி இன்றைக்கு கண்ணீரோடு காட்சி அளிக்கிற அந்த நிலையை இந்த அரசு கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல், இன்றைக்கு தனக்குத்தானே வாழ்த்துப் பாடுவதே முதல்வர்  முக்கியத்துவம் தருகிறார்கள்.

வடகிழக்கு பருவமழை, தொடர் மழை, கனமழை இந்த மழை எதிர்கொள்வதற்கு முன்பாகவே எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை இந்த அரசு எடுக்கவில்லை என ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார். 

இதுதொடர்பாக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களிலே இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.  இன்றைக்கு வலுவிழந்து கடந்த ஒன்பதாம் தேதி அன்று இரவு புதுச்சேரி மாமல்லபுரம் கடற்கரை பகுதி இடையே கரையை கடந்த வலுவிழந்த புயலை வலிமையோடு எதிர்த்தோம் என்று இன்றைக்கு மார்த்தட்டும் முதலமைச்சர், வாயார தன்னைத்தானே புகழ்ந்து கொள்வது, இனி மிகத் தீவிரப்புயல் வந்தால் அதை எப்படி எதிர் கொள்வாரோ என்கிற அச்சம் மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

புலவர்களையும் வைத்து ஆதரவு நிலை வாழ்த்து பாடுகிறார். புயல் என்று சொன்னால் அது வலுப்பெற்று அதிதீவிரமடைந்து  தொடர்மழை என்கிற நிலையிலே அதை வலிமையோடு எதிர்கொண்டு ஒரு உயிரிழப்பு இல்லாமல், பொருள் சேதமில்லாமல் எதிர்கொள்வது தான் வலிமையான பேரிடர் மேலாண்மையாகும்.  அறிவு சார்ந்த பேரிடர் மேலாண்மை என்பது, பேரிடர் வருவதற்கு முன்பாகவும், பேரிடர் எதிர்கொள்வதுபோதும்  பேரிடர் வந்த பின்பும் மேற்கொள்கிற பணியாகும்.  ப்ரி டிசாஸ்டர், டூரிங் டிசாஸ்டர், போஸ்ட் டிசாஸ்டர் ஆகிய அறிவு சார்ந்த அணுகுமுறையில் இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழக அரசு முழுமையான தோல்வியை தழுவி இருக்கிறது.

வடகிழக்கு பருவமழை, தொடர் மழை, கனமழை இந்த மழை எதிர்கொள்வதற்கு முன்பாகவே எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை இந்த அரசு எடுக்கவில்லை. பேரிடரை எதிர்கொள்கிற போது இந்த அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளையும் இந்த அரசு எடுக்க தவறியிருக்கிறது. பேரிடர் பின்பு எடுக்க வேண்டிய நிவாரண நடவடிக்கைகளுக்கான உரிய கணக்கெடுப்பு பணிகள் கூட நடைபெறவில்லை. பாதிக்கப்பட்ட விவசாயிகள் கண்ணீரோடு இன்றைக்கு காட்சியளித்துக் கொண்டிருக்கிறார்.

டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பல மாவட்டங்களில் விவசாயிகள் உயிருக்கு உயிராக பயிர்களை வளர்த்தார்கள். அந்த பயிர்கள் எல்லாம் சேதாரம் ஆகி இன்றைக்கு கண்ணீரோடு காட்சி அளிக்கிற அந்த நிலையை இந்த அரசு கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல், இன்றைக்கு தனக்குத்தானே வாழ்த்துப் பாடுவதே முதல்வர்  முக்கியத்துவம் தருகிறார்கள். அதிலேயே கவனம் செலுத்துகிறார். தனக்குத்தானே வாழ்த்து பாடுவதில் யாருக்கும் கவலையில்லை. ஆனால், ஒரு வலுவிழந்த புயலை நாங்கள் வழுமையோடு எதிர்கொண்டோம் என்று வாழ்த்தபா பாடுவதுதான் மக்களிடத்திலே ஒரு நகைச்சுவை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆகவே இது அறிவு சார்ந்த அணுகு முறையில் இந்த அரசு எடுத்த நடவடிக்கைகளை நாம் பட்டியலிட்டு ஒப்பிட்டு பார்க்கிற போது அது மக்களுக்கு முழுமையான பாதுகாப்பை தரவில்லை என்பதுதான் உண்மை நிலவரம் ஆகவே இனி வருகிற வடகிழக்கு பருவமழை நிலவரத்தை கலவரம் இல்லாமல் எதிர்கொள்வதற்கு இந்த அரசு முன்வருமா? என்று ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!
எச்.ராஜா மீது 3 பிரிவுகளில் பாய்ந்தது வழக்கு..! காவல்துறை அதிரடி!