வீடு திரும்புகிறார் முதல்வர் - அதிமுகவினருக்கு இனிப்பு தீபாவளி - 2 லோடு பட்டாசு தயார்

Asianet News Tamil  
Published : Oct 21, 2016, 11:43 PM ISTUpdated : Sep 19, 2018, 03:10 AM IST
வீடு  திரும்புகிறார் முதல்வர் - அதிமுகவினருக்கு இனிப்பு தீபாவளி - 2 லோடு பட்டாசு தயார்

சுருக்கம்

முதல்வர் ஜெயலலிதா தீபாவளிக்கு முன்னரே வீடு திரும்புவதால் இந்த் ஆண்டு தீபாவளி அதிமுகவினருக்கு சந்தோஷமான இனிப்பான தீபாவளியாக இருக்கப்போகிறது. அதற்காக 2 லாரி பட்டாசு ஆர்டர் கொடுக்கப்பட்டு சந்தோஷ தீபாவளியாக கொண்டாட உள்ளனர்.

முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த மாதம் 22 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நாளையுடன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு மாதம் ஆகிறது. முதல்வர் உடல்நிலையை கண்காணித்து சிகிச்சை அளிக்க லண்டன் மருத்துவர் ரிச்சர்டு பேல் சென்னைக்கு பல முறை வந்து சிகிச்சை அளித்தார்.

எய்ம்ஸ் மருத்துவர்களும் சிகிச்சை அளித்தனர், இடையில் சிங்கப்பூர் மருத்துவர்களும் நேரில் வந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.லண்டன் டாக்டர் வழிகாட்டுதலின் பேரில் முதல்வருக்கு எய்ம்ஸ் மற்றும் சிங்கப்பூர் மருத்துவர்கள் சிறப்பான சிகிச்சை அளித்ததன் பேரில் முதல்வர் ஜெயலலிதா சிறப்பாக உடல்நிலை தேறி வருகிறார்.

சில நாட்களுக்கு முன்னர் அவர் தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு நன்றி சொன்னதாக முன்னாள் அமைச்சர் பொன்னையன் தெரிவித்தார். இந்நிலையில் சிகிச்சைகள் முடிந்து முதல்வர் பூரண குணமடைந்து வருவதால் லண்டன் டாக்டர் ரிச்சர்டு மேற்கொண்டு அளிக்கவேண்டிய சிகிச்சைகள் குறித்து வழிகாட்டுதலை அளித்துவிட்டு லண்டன் சென்றார்.

இதற்கிடையே குணமடைந்து வரும் முதல்வரை பார்க்க வந்த முன்னாள் அமைச்சர் எச்.வி.ஹண்டே முதல்வருக்கு சிங்கப்பூர் பெண் மருத்துவர்கள் மூலம் பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது 10 நாளில் அவர் இல்லம் திரும்புவார் என தெரிவித்தார்.

இந்நிலையில் நேற்று பேட்டி அளித்த அதிமுக செய்தி தொடர்பாளர் பொன்னையன் முதல்வர் தனக்கான உணவை தானே எடுத்துகொள்கிறார், பூரண உடல் நலம் பெற்று வருகிறார் என தெரிவித்தார். இந்நிலையில் வரும் தீபாவளிக்கு முன்னர் அதாவது 27 ஆம் தேதி முதல்வர் தனது இல்லமான போயஸ் தோட்டத்துக்கு திரும்புகிறார் என நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல் வருகிறது. 

தீபாவளிக்கு முன்னர் முதல்வர் வீடு திரும்புவதால் அவர் வீட்டுக்கு வரும் முன்னரே போயஸ் இல்லம் தயாராகி வருகிறது. எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு அதிமுக தொண்டர்களுக்கு தீபாவளி இனிக்கும் தீபாவளியாக அமைய போகின்றது. இதை கொண்டாடுவதற்காக அதிமுக முக்கிய நிர்வாகிகள் இரண்டு லோடு பட்டாசுக்கும் ஏற்பாடு செய்துள்ளார்களாம். 

PREV
click me!

Recommended Stories

DMK NDA Alliance : பாஜகவுக்கு ஓகே.. 22 எம்பிக்களுடன் காத்திருக்கும் திமுக.. தமிழக அரசியலில் திடீர் ட்விஸ்ட்.!
TN Politics: வன்னியரசு எனும் நான்.! யார் இந்த திருமாவின் படைத்தளபதி?!