மகாராஷ்ட்ராவில் பாஜகவை வச்சு செய்யும் சிவசேனா !! இரண்டரை வருஷம் நாங்கதான் முதலமைச்சர்… போட்டுத் தாக்கும் தாக்ரே….

By Selvanayagam PFirst Published Oct 26, 2019, 7:19 PM IST
Highlights

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் முதலமைச்சர் பதவியை தலா 2.5 ஆண்டுகள் பகிர்ந்து கொள்ள வேண்டும் என பாஜக எழுத்துப்பூர்வமாக எழுதி கொடுத்தால் தான் ஆட்சி அமைச்ச ஆதரவு தரப்போவதாக சிவசேனா அறிவித்துள்ளது.க்க வேண்டும் என்று சிவசேனா விரும்புகிறது.

288 தொகுதிகளை கொண்ட மராட்டிய சட்டசபை தேர்தலில் பா.ஜனதா - சிவசேனா கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. வெளியான தேர்தல் முடிவின் மூலம் மராட்டியத்தில் மீண்டும் பா.ஜனதா - சிவசேனா கூட்டணி ஆட்சி அமைவது உறுதியாகி உள்ளது.

பாஜக  தனித்து ஆட்சியை பிடிக்கும் நோக்கில் அதிக எண்ணிக்கையில் 164 தொகுதிகளில் போட்டியிட்டது. சிவசேனாவுக்கு 124 தொகுதிகள் தான் வழங்கப்பட்டன. ஆனால் தேர்தல் முடிவின் மூலம் பாஜகவின்  கனவு பலிக்காமல் போய் விட்டது. தற்போது பாஜகவின்  ‘குடுமி’ சிவசேனா வசம் அகப்பட்டு கொண்டுள்ளது.

அதன்படி ஆட்சியில் சம பங்கு வேண்டும் என்று பாஜகவை  சிவசேனா வலியுறுத்தி உள்ளது. முதல்வர் பதவியை இரண்டரை ஆண்டுகளாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையில் சிவசேனா மிகவும் பிடிவாதமாக உள்ளது. 

இந்த நிலையில் உத்தவ் தாக்கரே இன்று புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை  நடத்தினார். கூட்டத்தில் , பாஜகவின் மூத்த தலைவரான அமித் ஷா அல்லது தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோரிடமிருந்து ஆட்சியில் சம பங்கு அதாவதது தலா 2.5 ஆண்டுகள் என  எழுத்துப்பூர்வமாக கொடுக்க  வேண்டும் என்று  வலியுறுத்தப்பட்டது. 

இந்நிலையில் தீபாவளிக்கு பிறகு, பாஜக தலைவர் அமித் ஷா மற்றும் உத்தவ் தாக்கரே ஆகியோர் முதலமைச்சர் பதவி மற்றும் ஆட்சியில் சம பங்கு,  அரசு அமைப்பது குறித்து கலந்துரையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

click me!