இனி உங்க வீட்டுக்கே வரும்... இணை நோயாளிகளுக்கு அமைச்சர் மா.சு சொன்ன குட்நியூஸ்...!

By Kanimozhi PannerselvamFirst Published Jul 8, 2021, 11:48 AM IST
Highlights

நீரழிவு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு வீடுகளுக்கே சென்று மாத்திரை வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

சென்னை விருகம்பாக்கம் தொகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினர் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்: கொரோனா காலத்தில் ரத்த அழுத்தம், நீரழிவு போன்ற இணை நோய் உள்ளவர்கள் மாத்திரை வாங்குவதற்காக வெளியில் செல்ல சிரமப்படுகிறார்கள். 

எனவே மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் தொடங்கி வைக்க உள்ளதாக தெரிவித்தார். அதன் படி முதற்கட்டமாக நீரழிவு மற்றும் ரத்த அழுத்த நோயுள்ள 20 லட்சம் பேர் முதற்கட்டமாக கண்டறியப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு வீடு தேடிச் சென்று மாத்திரைகள் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் தெரிவித்தார். 

தமிழகத்தில் ஒரு கோடி பேருக்கும் மேற்பட்ட இணை நோயாளிகளுக்கு வீடுகளுக்குச் சென்று மருந்து, மாத்திரைகள் வழங்கும் மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் தொடங்கிவைக்க உள்ளார். தமிழகம் முழுவதும் இணை நோயாளிகளை கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்திற்கு இம்மாதம் வர வேண்டிய 70 லட்சம் தடுப்பூசிகளில் 10 லட்சம் மட்டுமே வந்துள்ளதாக தெரிவித்தார். 

நாளை மறுநாள் ஒன்றிய சுகாத்துத்துறை அமைச்சரை 3 மணிக்கு சந்திக்க நேரம் கேட்டிருந்தோம். ஹர்ஷவர்தன் ராஜினாமா செய்ததால் புதிய அமைச்சர் பதவியேற்றவுடன் அவரை சந்திக்கமுடியுமா என தெரியவில்லை. திட்டமிட்டப்படி சுகாத்துறை செயலாளர் டெல்லி சென்று ஒன்றிய சுகாதாரத்துறை செலாளரை சந்தித்து கூடுதல் தடுப்பூசி , எம்ய்ஸ் , புதிய மருத்துவக்கல்லூரிகள் உள்ளிட்டவை குறித்து வலியுறுத்தவுள்ளோம் என தெரிவித்தார்.

click me!