ஆட்சியில் இருப்பவர்கள் இதை தெரிஞ்சிக்குங்க. ஆட்சி இழந்த பிறகு நீங்களே எதிர்ப்பீங்க. R.K செல்வமணி பகீர்.

By Ezhilarasan BabuFirst Published Jul 8, 2021, 11:37 AM IST
Highlights

ஒளிப்பதிவு சட்டத்திருத்த மசோதவிற்கு எதிராக கருத்து கூறுவது சட்டத்திற்கு எதிரானதாக பார்க்கவேண்டாம் எனவும், திரைத்துறையினரின் கருத்துக்களை கேட்ட பின் சட்டத்திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.

ஒளிப்பதிவு சட்டத்திருத்த மசோதவிற்கு எதிராக கருத்து கூறுவது சட்டத்திற்கு எதிரானதாக பார்க்கவேண்டாம் எனவும், திரைத்துறையினரின் கருத்துக்களை கேட்ட பின் சட்டத்திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பாக தென்னிந்திய திரைப்பட ஒலிப்பதிவாளர் சங்க தொழிலாளர்களுக்கு நிவாரண பொருட்களை மக்கள் நீதி மைய தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் வழங்கினார். 

இதில் சிறப்பு விருந்தினராக பெப்ஸி சங்கத்தின் தலைவர் ஆர்.கே செல்வமணி பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.கே செல்வமணி : ஒளிப்பதிவு திருத்தச் சட்ட மசோதா குறித்து கருத்து தெரிவிப்பது அந்த சட்டத்திற்கு எதிரானவர்கள் என்பது போல் பார்க்க வேண்டாம்.  திரைத்துறையினரை பாதிக்கும் சட்டத்திற்கு, திரைத்துறையினரின் கருத்து கேட்டு பாதிப்பு ஏற்படாத வகையில் சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதற்காக தான் கருத்து தெரிவிக்கிறோம். 

இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால், கடந்த காலத்தில் வெளியான பராசக்தி படத்தைக்கூட மறு தணிக்கை செய்து தடை செய்ய முடியும். இந்த சட்டம் கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது. தணிக்கை செய்யும் விஷயம் குழுவிடம் அல்லது அமைப்பிடம் கொடுப்பது தவறானது. படம் எடுத்து மறு தணிக்கை விஷயங்களில் நீதிமன்றத்திற்கு அதிகாரம் இருக்கட்டும். ஒருவேளை திரைத்துறையின் பேச்சுரிமையை பாதிக்கும் இந்த சட்டம் நிறைவேறினால் தற்போது ஆட்சியில் இருப்பவர்கள் கூட நாளை ஆட்சி இழந்த பின் இதற்கு எதிராக குரல் கொடுப்பார்கள். ஆகையால் எங்களால் எதிர்த்து குரல் கொடுக்க முடிந்த அளவிற்கு குரல் கொடுப்போம். என அவர்  பேசியிள்ளார்.
 

click me!