#BREAKING முழு ஊரடங்கில் என்னென்ன தளர்வுகள்?... முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை...!

By Kanimozhi PannerselvamFirst Published Jun 4, 2021, 11:49 AM IST
Highlights

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. 

தமிழகத்தில் கொரோனா 2வது அலையைக் கட்டுப்படுத்தும் விதமாக மே 1ம் தேதி முதல் தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால் மக்களின் காட்டிய அலட்சியத்தால் கொரோனா தொற்று பரவல் கிடுகிடுவென உயர்ந்தது. எனவே தமிழக அரசு மே 24ம் தேதி முதல் தளர்வுகளற்ற ஊரடங்கை அமல்படுத்தியது. இதனால் தொற்று எண்ணிக்கை லேசாகக் குறையத் தொடங்கியது. ஆனாலும், மருத்துவ நிபுணர்கள் அரசியல் கட்சிகளின் ஆலோசனைப்படி ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீட்டிக்க அரசு முடிவு செய்தது. 

அதன்படி கடந்த 1ம் தேதி முதல் தமிழக அரசு பிறப்பித்திருந்த தளர்வுகற்ற முழு ஊரடங்கு வரும் 7ம் தேதியுடன் நிறைவடைகிறது. முழு ஊரடங்கின் பலனாக சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கொரோனா தொற்றின் தாக்கம் கணிசமாக குறைந்துள்ளது. எனவே ஊரடங்கில் சிலர் தளர்வுகளை அமல்படுத்தலாமா? அல்லது தளர்வுகளற்ற ஊரடங்கையே தொடரலாமா? என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். 

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. அதில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத்துறை இயக்குநர், தலைமைச் செயலாளர் இறையன்பு, முதன்மைச் செயலாளர்கள் உதயச்சந்திரன், உமாநாத், டிஜிபி திரிபாதி உள்ளிட்ட உயர்  அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்தில் கொரோனா பாதிப்பு மிகவும் குறைவாக உள்ள பகுதிகளில் தளர்வுகளை வழங்கலாமா?, கொரோனா தொற்று அதிகம் உள்ள கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் தளர்வுகளற்ற ஊரடங்கை தொடரலாமா? என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. 

click me!