வணக்கம் மைலார்ட்... ஸ்டாலினுக்கு செக் வைத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கு..!

Published : Mar 17, 2021, 06:14 PM IST
வணக்கம் மைலார்ட்... ஸ்டாலினுக்கு செக் வைத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கு..!

சுருக்கம்

தமிழக முதல்வர் பழனிச்சாமி மற்றும் அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் சார்பில் தொடர்ந்த அவதூறு வழக்குகளில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சம்மன் அனுப்ப சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக முதல்வர் பழனிச்சாமி மற்றும் அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் சார்பில் தொடர்ந்த அவதூறு வழக்குகளில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சம்மன் அனுப்ப சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முதல்வர் பழனிசாமி பற்றிய மக்களின் மனநிலை குறித்தும், வாக்கி டாக்கி கொள்முதல் விவகாரத்தில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் குறித்தும் ஸ்டாலின் கருத்து தெரிவித்திருந்தார். அவரது கருத்து முதலமைச்சர் பழனிசாமி மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாக கூறி, அவர்கள் சார்பில்  சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தமிழக அரசு இரு அவதூறு வழக்குகளை தொடர்ந்தது.

அந்த வழக்குகள்  முதன்மை நீதிபதி செல்வகுமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, இரு அவதூறு வழக்குகளிலும் திமுக தலைவர் ஸ்டாலின் ஏப்ரல் 16ஆம் தேதி நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளார். இதன்படி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்பி எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகும்படி சம்மன் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

முக்தார் மீது நடவடிக்கை வேண்டும்.. டெல்லி சென்ற கரு.நாகராஜன்.. ஜி.கே.வாசனிடம் கடிதம்!
மகளிர் உரிமைத் தொகை உயருகிறது..! எவ்வளவு தெரியுமா? முதல்வர் சொன்ன குட்நியூஸ்!