ஆர்.கே.நகரில் இன்று களமிறங்கும் எடப்பாடி ….தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார் !!!

 
Published : Dec 07, 2017, 08:43 AM ISTUpdated : Sep 19, 2018, 01:33 AM IST
ஆர்.கே.நகரில் இன்று களமிறங்கும் எடப்பாடி ….தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார் !!!

சுருக்கம்

cm edappadi palanisamy campaign in r.k.nagar

சென்னை ஆர்.கே.நகரில் வரும் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதிமுக வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று முதல் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளார்.

முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி மரணமடைந்தார். இதையடுத்து அந்த தொகுதியில் கடந்ம ஏப்ரல் மாதம் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது.

ஆனால் தேர்தல் பிரச்சாரத்தின்போது சில வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தாக எழுந்த புகாரையடுத்து தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் வரும் 21 ஆம் தேதி ஆர்,கே.நகர் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில்  திமுக சார்பில் மருது கணேசும்,
அ.தி.மு.க. வேட்பாளராக மதுசூதனனும் பா.ஜ.க. வேட்பாளராக கரு.நாகராஜனும், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக கலைக்கோட்டுதயமும், சுயேட்சை வேட்பாளராக டி.டி.வி.தினகரனும் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் அதிமுக வேட்பாளர்  மதுசூதனை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர்  ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் இன்று முதல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளனர்.

இன்று காலை 9 மணிக்கு ஆர்.கே.நகரில் அ.தி.மு.க. தேர்தல் பணிமனையை முதலமைச்சர் ர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார். அதனை தொடர்ந்து அவர், தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார்.

திமுக வேட்பாளர் மருது கணேஷ் ஏற்கனவே தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிவிட்ட நிலையில் அவரை ஆதரித்து மு.க.ஸ்டாலின் மற்றும் தோழமை கட்சித் தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளன.

டி.டி.வி.தினகரன் நாளை மறுநாள் முதல் களத்தில் குதிக்கிறார். இதே போன்று அனைத்து கட்சி வேட்பாளர்களும் களத்தில் இறங்கி பிரச்சாரம் செய்து வருவதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!
நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!