பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்ட தைலாபுரம்!! 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு!!

By sathish kFirst Published Feb 22, 2019, 12:18 PM IST
Highlights

காவல்துறையின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.  200க்கும் மேற்பட்ட போலீசார் ராமதாஸ் தோட்டம் அமைந்திருக்கும் தைலாபுரம் பகுதியில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

அதிமுக, கூட்டணியில், பாமகவுக்கு, 7 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா எம்பி, பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது, தேமுதிக, உள்ளிட்ட கட்சிகளுக்கு, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.அதே நேரத்தில், அதிமுக, தலைமையிடம் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறியதால், ராமதாஸ், அன்புமணி மற்றும் பாமகவினர் உற்சாகம்  அடைந்துள்ளனர். 

தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்த, ராமதாசின் வீடு அமைந்துள்ள, திண்டிவனம், தைலாபுரம் தோட்டத்தில், தடபுடல் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதற்கு வரும்படி, முதல்வர், இபிஎஸ், மற்றும் துணை முதல்வர், பன்னீர் செல்வத்திற்கு அழைப்பு விட்டனர். இந்த அழைப்பை ஏற்று, இன்று முதல்வரும், துணை முதல்வரும், தைலாபுரம் தோட்டம் செல்கின்றனர். இதையொட்டி தைலாபுரம் தோட்டம் அமைந்துள்ள பகுதி காவல்துறையின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.  200க்கும் மேற்பட்ட போலீசார் தைலாபுரம் பகுதியில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

அங்கு, சைவ, அசைவ உணவு வகைகள் பரிமாறப்பட, இந்த விருந்தில் பங்கேற்கும்படி, அமைச்சர்களுக்கும் அழைப்பு விடுத்ததால், அமைச்சர்களும் கலந்து கொள்கின்றன. அனால், சொந்த ஊரான திண்டிவனத்தைச் சேர்ந்த சிவி சண்முகம் இந்த விருந்தில் கலந்துகொள்ளவில்லை.

கடந்த 2006-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது திண்டிவனத்தை சேர்ந்தவரும், தற்போதைய சிவி சண்முகத்தின் உறவினர் முருகானந்தம் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், ராமதாஸ், அப்போது மத்திய அமைச்சராக இருந்த அன்புமணி உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதனால் ராமதாசுக்கும், சி.வி. சண்முகத்துக்கும் இடையே கடும் மோதல் நிலவுவதால் விருந்தில் சண்முகம் பங்கேற்பது சந்தேகம் என கூறப்படுகிறது.

click me!