கோமாளி ஜெயக்குமாருக்கு ஊழலை பற்றி பேச தகுதியே இல்லை! அவருக்கு அரசியல் எதிர்காலமே இல்லை! வைத்திலிங்கம் விளாசல்

By vinoth kumar  |  First Published May 19, 2023, 6:34 AM IST

முன்னாள் அமைச்சர் காமராஜ் எடப்பாடிக்கு ஆதரவாக கூட்டம் போட்டுள்ளார். அவர் அவரது சொந்த ஊரான மன்னார்குடி தொகுதியில் தேர்தலில் நின்று வெற்றி பெற சொல்லுங்கள். டெபாசிட் கூட மன்னார்குடி தொகுதியில் வாங்க முடியாது.


யார் எதை கூறினாலும் அதையே தானும் கூறிவருகிறார் ஜெயக்குமார். அவருக்கு அரசியல் எதிர்காலம் இல்லை என வைத்திலிங்கம் ஆவேசமாக கூறியுள்ளார். 

மன்னார்குடியில் ஓபிஎஸ் ஆதரவாளரும், எம்எல்ஏவுமான வைத்திலிங்கம் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- எடப்பாடி பழனிசாமிக்கு திராவிட வரலாறு தெரியாது. அண்ணா திமுக வரலாறு தெரியாது. தமிழ்நாட்டு அரசியலை, இந்திய அரசியலை, உலக அரசியலை என்னோடு விவாதிக்க தயாரா? கேட்டு சொல்லுங்க. நான் 2001-லயே அமைச்சர், எடப்பாடி பழனிசாமி 2011-ல் தான் அமைச்சர். எனக்கு அவர் ஜூனியர் தான். எடப்பாடி தொகுதியில் 1984-ல் ஜனதா தளத்திற்காக வேலை பார்த்தவர். 1986-ல் ஊராட்சி மன்றத்தலைவர் தேர்தலுக்கு நின்று தோல்வியடைந்தவர்.

Latest Videos

இதையும் படிங்க;- ஓபிஎஸ்,டிடிவியை ஒதுக்கிவிட்டு,சசிகலாவை சேர்த்து கொள்ள தயாராகும் இபிஎஸ்.?புதிய குண்டை தூக்கி போடும் பூங்குன்றன்

எடப்பாடி பழனிசாமி ரகசியமாக சபரீசனிடம் பேசி வருகிறார். இது அவரது மனசாட்சிக்கு தெரியும். நாங்கள் தான் உண்மையான அதிமுக என செயல்பட்டு வருகிறோம். நீதிமன்ற தீர்ப்பு வரும் ஜூன் மாதம் வரும். அந்த தீர்ப்பின் நிலைமைக்கு ஏற்ப எங்களது முடிவு இருக்கும். அதிமுகவே நாங்கள்தான், எடப்பாடி பழனிசாமியை தவிர்த்துவிட்டு அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்படுவோம் என்றார். 

மேலும், அமமுகவும், அதிமுகவும் இணைந்து செயல்படும் என ஓபிஎஸ் மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறியிருக்கிறார்கள். அதன்படி மன்னார்குடி வந்த எனக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். ஊழலைப் பற்றி ஜெயக்குமார் பேசுவதற்கு எந்தவித தகுதியும் இல்லை. அவர் ஒரு கோமாளி. அவர் 3 ஆண்டுக்குள் மாநிலங்களவை சீட் பெறவேண்டும் என்ற நோக்கத்தில் இதுபோன்று பேசிவருகிறார். அவர் இனி சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற முடியாது. அவருக்கு அரசியல் எதிர்காலம் இனி கிடையாது.

இதையும் படிங்க;-  ஓபிஎஸ், டிடிவி சந்திப்பை கண்டு பயப்பட வேண்டிய அவசியம் எடப்பாடிக்கு இல்லை - கடம்பூர் ராஜூ விமர்சனம்

ஓபிஎஸ் விரைவில் சின்னம்மவைச் சந்திப்பார். முன்னாள் அமைச்சர் காமராஜ் எடப்பாடிக்கு ஆதரவாக கூட்டம் போட்டுள்ளார். அவர் அவரது சொந்த ஊரான மன்னார்குடி தொகுதியில் தேர்தலில் நின்று வெற்றி பெற சொல்லுங்கள். டெபாசிட் கூட மன்னார்குடி தொகுதியில் வாங்க முடியாது என வைத்திலிங்கம் கூறியுள்ளார்.

click me!