பெரியகருப்பணின் வெற்றியை சரிக்கும் குத்தீட்டி... திருப்பத்தூரில் திமுகவின் பாவ கணக்கை முடிக்கும் சித்ரகுப்தன்!

By Thiraviaraj RMFirst Published Sep 7, 2020, 12:41 PM IST
Highlights

திமுகவில் 15 ஆண்டுகளாக திருப்பத்தூரில் வெற்றிபெற்று வரும் பெரியகருப்பனுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 

மூன்று முறை சிவகங்கை மாவட்டத்துக்கு உட்பட்ட திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்று வந்த முன்னாள் அமைச்சர் பெரியகருப்பனுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து வருகிறார் அதிமுக செய்தி தொடர்பாளரும், நமது புரட்சித் தலைவி அம்மா நாளிதழின் ஆசிரியருமான மருது அழகுராஜ்.

எதிர்கட்சிகளை கவிதைகளால் ’குத்தீட்டி’பாய்ச்சி, அரசியலின் பாவ - புண்ணியக் கணக்குகளை ’சித்ரகுப்தனாய்’எழுதி, கவிஞனாய், எழுத்தாழனாய், பேச்சாளனாய் அழகு சாம்ராஜ்யம் நடத்தி வந்த மருது அழகுராஜ், திருப்பத்தூரில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தி வருகிறார். “அணைக்கட்டில் இருந்து திறக்கப்படும் தண்ணீரானது பள்ளங்களை ஏமாற்றி மேட்டை நோக்கியே பாய்கின்றன”என்று மு.மேத்தாவின் வேதனை வரிகளை மாற்றி, பள்ளங்களை மேடேற்ற புதிய பாய்ச்சல் காட்டி வருகிறார் மருது அழகுராஜ். பின் தங்கிய மாவட்டங்களில் ஒன்று சிவகங்கை மாவட்டம். அங்கு பெரும்பாலான மக்களிடம் அரசியல் விழிப்புணர்வு இல்லை. ஏமாற்று அரசியல்வாதிகளால் இளைஞர்கள் பின்வாங்கி ஒதுங்கிக் கொள்கின்றனர். பெரும்பாலான அரசியல்வாதிகள் தங்களது பாக்கெட்டுகளை நிரப்பிக் கொள்ளவே திட்டம்போடுகிறார்களே தவிர மக்களின் வயிற்றை நிரப்ப எண்ணம் வைப்பதில்லை. 

இதனால், வெறுத்துப்போன மக்கள் அரசியல்வாதிகள் மீது நம்பிக்கையற்று ஏதோ வாக்களிக்கிறோம் என விரக்தியோடு ஜனநாயகக் கடமை ஆற்றி வந்தனர். அங்கு திமுக மீது மட்டுமல்ல. அதிமுகவில் உள்ள சில அரசியல்வாதிகள் மீதும் அதிருப்தியில்தான் இருந்து வந்தனர் மக்கள். மருது அழகுராஜ் அங்கு சென்று பார்க்கும்போது தான் தனது சொந்த மண்ணை சேர்ந்த் மக்கள் ஏமாற்றப்படுவதையும், சுரண்டப்பட்டு ஏழ்மையில் உழல்வதையும் கண்டு அவர்களுக்கு ஏதாவது செய்தாக வேண்டும் என தீர்மானித்துள்ளார்.

அப்போது கொரொனா தொற்று ஆரம்பிக்க, அன்றாட கூலிகளின் வயிறுகள் சுறுங்கின. அப்போது தமிழகத்திலேயே முதன்முறையாக நிவாரண பொருட்களை எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி வழங்க ஆரம்பித்துள்ளார். அதன் பிறகு மக்கள் மனமகிழ்ந்தது மேலும் உத்வேகப்படுத்தவே இப்போது வரை தரமான அரிசி, பருப்பு வகைகள், சர்க்கரை, ரஸ்க், கபசுர குடிநீர் உள்ளிட்ட உணவு பொருட்களும் சோப்பும் வழங்கி வருகிறார். இதுவரை அந்தத் தொகுதிக்குட்பட்டு உள்ளவர்களின் ரேஷன் கார்டுகளின் கணக்குப்படி 95 சதவிகிதம் பேருக்கு இவரது நிவாரணப்பொருட்கள் சேர்ந்துள்ளது. தனது உழைப்பாலும், மகனது வருமானத்திலும் சேர்த்து வைக்கப்பட்ட ரூ 3 கோடிக்கும் அதிகமான பணத்தை நிவாரணம் வழங்க செலவிட்டுள்ளார்.

இது ஒருபுறமிருக்க சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் 40 ஆண்டு காலமாக திமுக பேச்சாளராக இருந்தவரும் கருணாநிதிக்காக தீக்குளித்தவருமான சாமிநாதான் திமுகவில் இருந்து விலகி கழக செய்தி தொடர்பாளர் மருது அழகுராஜ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். இதுகுறித்து சாமிநாதன், ‘’திமுக கருணாநிதி கைது செய்யப்பட்டு சிறை சென்றபோது அந்த செய்தியை தாங்க முடியாமல் தீக்குளித்து ஆபத்தான நிலையில்  இருந்து மீண்டு வந்தேன். நான் திமுக மீது பற்றுக்கொண்ட நான் மருது அவர்களின் மக்கள்  தொண்டினை பாராட்டும் விதமாகவும், தொகுதி முழுவதும் மக்கள் ஆதரவைப் பெற்ற நபரான மருது அழகுராஜ் மக்கள் பணியில் தன்னை இணைத்துக் கொள்ள அவர் முன்னிலையில் எனது தலைமையில் 60க்கும் மேற்பட்டோர் அதிமுக கட்சியில் இணைந்து உள்ளேன்’’என்கிறார்.  

தொடர்ந்து மற்ற கட்சிகளில் இருந்து மருது அழகுராஜின் அணுகுமுறையால் ஈர்க்கப்பட்டு 26 ஆண்டுகளாக புதூர் ஒன்றிய பொறுப்பில்  இருந்த திமுகவை சேர்ந்த ஜெகநாதனை அதிமுக பக்கம்  வந்துவிட்டார். இந்த ஜெகநாதன் நாதஸ்வரம் என்ற சின்னத்திரை சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்தவர். திருப்பத்தூர் தொகுதியில் கணிசமாக உள்ள முத்தரையார் சமூகத்தில் முக்கியமான நபர் இந்த ஜெகநாதன். 

 காங்கிரஸ் முக்கிய பிரமுகரும், கல்லல் ஒன்றிய துணை சேர்மன் கொங்கரத்தி நாராயணனையும் அதிமுகவில் இணைந்த்து விட்டார். ரணசிங்கபுரம் ஊராட்சி மன்ற தலைவரும், திமுகவில் மாவட்ட பொறுப்பில் உள்ள ஞானசேகர் தலைமையில் முன்னூறு பேரருடன் அதிமுகவில் இணைந்து விட்டார். இந்த ஞானசேகர் பெரியகருப்பன் எம்.எல்.ஏ.,வின் உறவுக்காரர். இப்படி கட்சிக்காரர்கள் மட்டுமின்றி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் மருது ழகுராஜின் சேவைக்காக கட்சியில் இணைந்து வருகின்றனர். அந்தப்பகுதியில் உள்ள கல்லூரி பேராசிரியர்களும், மாணவர்களும் தன்னெழுச்சியாக அதிமுகவில் இணைந்து வருகின்றனர். 

அப்படி வருபவர்களிடம், தூய்மையான அரசியல் என்றால் என்ன? எது அரசியல். எப்படி செயல்பட வேண்டும் என்றெல்லாம் எடுத்துரைக்கிறார். இதனால், திமுகவில் 15 ஆண்டுகளாக திருப்பத்தூரில் வெற்றிபெற்று வரும் பெரியகருப்பனுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதிமுகவின் கை ஓங்கி வருவதாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகின்றனர். இதுகுறித்து திருப்பத்தூர் தொகுதியை சேர்ந்த அதிமுக பிரமுகர் ஒருவர், ‘’கடந்த மூன்று முறையும் தொடர்ந்து பெரியகருப்பன் வெற்றி பெற்றதால் அதிமுக கட்சியை சேர்ந்த நாங்கள் சோர்ந்து விட்டோம். ஆனால், இந்த முறை இந்தத் தொகுதியில் 30 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று அதிமுக வெற்றி பெறும். அதற்கு காரணம் அண்ணன் மருது அழகுராஜ். மாற்று கட்சியினரையும் அதிமுக பக்கம் இழுத்து வருகிறார். 

திமுகவினரே இந்த முறை அதிமுகவுக்குத்தான் எங்கள் வாக்கு என மருது அண்ணனிடம் வாக்குறுதி அளித்து வருகின்றனர்.  ஆக இந்த முறை அதிமுக வேட்பாளர் திருப்பத்தூர் தொகுதியில் வெற்றி பெறுவது உறுதி’’என்கிறார்கள்.

click me!