கொரோனாவை செயலிழக்க வைக்கும் ஆன்டிபயாடிக் மருந்துகள்..!! சீன ஆராய்ச்சியாளர்கள் அசத்தல்..!!

By Ezhilarasan BabuFirst Published Apr 2, 2020, 2:53 PM IST
Highlights

 தற்போது தங்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ள  இந்த ஆண்டிபயாட்டிக்கள் மிகவும் சக்தி  வாய்ந்தவைகளாக  இருக்கும் என்றும் ,  கொரோனா  வைரசில் ஏற்படும் பிறழ்வு அபாயத்தை தணிக்கவும் வல்லது என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர் .

கொரோனா வைரசை கட்டுப்படுத்த வல்ல  மருந்தை கண்டுபிடிப்பதில் சீன விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் , இந்நிலையில் உடலில் செலுத்தியவுடன் சில மணி நேரங்களில் நல்ல பலன் கொடுக்கக்கூடிய (ஆன்டிபாயாடிக் வகை) மருந்துகளை  கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும்  சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர் .  கொடிய இந்த வைரஸ் தாக்குதலால் உலகமே தள்ளாடி வருகிறது ,  லட்சக்கணக்கான மக்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர் .  உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 50 ஆயிரத்தை நெருங்கி வருகிறது .  இந்நிலையில் வைரசுக்கு மருந்து  கண்டுபிடித்தே ஆகவேண்டும் என்ற நெருக்கடியில் மனித குலம்  தள்ளப்பட்டுள்ளது .  அமெரிக்கா ,  இஸ்ரேல் ,  சீனா ,  ஜப்பான்  , உள்ளிட்ட நாட்டு விஞ்ஞானிகள் மருந்து கண்டுபிடிப்பில் தீவிரம் காட்டி வருகின்றனர் .  சோதனையான இந்த காலகட்டத்தில்  சீன விஞ்ஞானிகள் உலக மக்களுக்கு ஒரு மகிழ்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளனர் . இது குறித்து தெரிவித்துள்ள ஹாங்காங் பல்கலைக்கழக தொற்று நோய் நிபுணர் பென் கோவ்லிங் மற்றும் அவரது குழுவினர்,  

இந்த ஆண்டின்  துவக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட  , வைரஸ் கிருமிகளை அழிப்பதற்கான தங்களின் சோதனை தற்போது வெற்றி பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர் இந்த சோதனையில் கிருமிகளை கட்டுபடுத்தும் அதாவது அதை செயலிழக்க வைக்கும் பலவகை  நோய் எதிர்ப்பு காரணிகள் அதாவது ஆன்டிபயாட்டிக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அத்தகை  ஆன்ட்டிபாயாட்டிக்களை   உடலில் செலுத்துவதன் மூலம் வைரஸ் கிருமிகளை உயிரணுக்களுக்குள் நுழையவிடாமல் தடுக்க முடியும் என்பதும்  தங்களது ஆய்வில் உறுதியாகியுள்ளதாகவும்  அவர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா  வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் உடலில் இருந்து  எடுக்கப்பட்ட ரத்த மாதிரியைக்  கொண்டு சோதனை நடத்தப்பட்டதாகவும் அப்போது தாங்கள் செலுத்திய ஆண்டிபயாட்டிக்கள்  வைரஸை உயிரணுக்குள்  நுழையவிடாமல் தடுத்ததாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர் .  தங்களிடமிருந்த சுமார் இருபது வகையான ஆன்ட்டிபயாட்டிக்களை  வைரஸ் பாதித்தவர்களுக்கு செலுத்தியபோது அது பலரது உடலில்  சிறந்த முறையில் செயலாற்றிய தாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர் . 

 தற்போது தங்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ள  இந்த ஆண்டிபயாட்டிக்கள் மிகவும் சக்தி  வாய்ந்தவைகளாக  இருக்கும் என்றும் ,  கொரோனா  வைரசில் ஏற்படும் பிறழ்வு அபாயத்தை தணிக்கவும் வல்லது என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர் .  தற்பொழுது இந்த மருந்தை தயாரித்து வரும் குழு சீனாவைச் சேர்ந்த பயோடெக் நிறுவனமான பயோசயின்சஸுடன் கூட்டு சேர்ந்துள்ளது அதேபோல் இந்த மருந்தை புற்றுநோய்,  ஆட்டோ இம்யூன் நோய்கள் மற்றும் தொற்று நோய்களுக்கு சிகிச்சையளிக்க அவை பயன்படுத்தப்படலாம்."என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.  இந்நிலையில் இந்த சோதனை இன்னும் பல படிகளை கடக்க வேண்டி உள்ளதால் அவை விரைவில் சாத்தியப்படும் என்றும் தற்போது மக்கள் எதிர்பார்த்துக் காத்துள்ள நோய்த் தடுப்பு மருந்துகளைக் காட்டிலும் இது அதிக சக்தி வாய்ந்ததாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர் . 

 

 

click me!