இந்தியாவிடம் மொத்தமாக சரண்டரானது சீனா..!! மோடிகிட்ட ஜி ஜின் பிங் ஜம்பம் பலிக்கல... நீங்களே பாருங்க..!!

By Ezhilarasan BabuFirst Published Nov 12, 2020, 4:32 PM IST
Highlights

மூன்றாவது மற்றும் இறுதி கட்டத்தில் இரு தரப்பினரும் பாங்கொங் த்சோ ஏரி பகுதியின் தெற்கு  கரையிலும் சுஷுல் மற்றும் ரெஜாங் லாவைச் சுற்றியுள்ள மலைப்பகுதிகளிலும்  தங்கள் ஆக்கிரமிப்பை காலி செய்ய வேண்டும். 

இந்திய சீன எல்லையில் பதட்டம் தொடர்ந்து நடித்து வரும் நிலையில் இந்தியாவும் சீனாவும் அடுத்த 3 நாட்களுக்கு தினமும் 30 சதவீத துருப்புகளை மூன்று கட்டங்களாக பின்வாங்கவும், பாங்கொங் த்சோ ஏரிப் பகுதியிலிருந்து படைகளை திரும்பப் பெறவும் ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்திய-சீன எல்லையில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக பதற்றம் நீடித்து வருகிறது. கடந்த மே-5 ஆம் தேதி  கிழக்கு லடாக்கில் ஏற்பட்ட மோதலில் இரு தரப்பிலும் 200 க்கும் மேற்பட்ட வீரர்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டனர். அதேபோல மே9- ஆம் தேதி அன்று வடக்கு சிக்கிம் பகுதியில் 150 வீரர்கள் மோதிக்கொண்டனர்.  இதனையடுத்தே அதே 9 ஆம் தேதி எல்லைப் பகுதிக்கு சீனா ஹெலிகாப்டர்களை அனுப்பியது. அதைத் தொடர்ந்து இரு  நாடுகளும் எல்லையில் படைகளை குவித்தன. ஜூன் 15-இரவு கல்வான் பள்ளத்தாக்கில் இருநாட்டு வீரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 30 சீனர்கள் கொல்லப் பட்டதாக கூறப்பட்டது. ஆனால் சீனா அதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை, மறைத்துவிட்டது. அதனைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே எல்லையில் பதற்றம் அதிகரித்த நிலையில் எப்போது வேண்டுமானாலும் போர் ஏற்படலாம் என்ற சூழல் ஏற்பட்டது. 

 

ஆனால் இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து இருநாடுகளும் படைகளை திரும்பப் பெறுவது என ஒப்புக் கொள்ளப்பட்டது. இருநாடுகளும் குறைந்த அளவில் படைகளைத் திரும்பப் பெற்ற நிலையில் மீண்டும் பதற்றம் அதிகரித்தது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே  நீண்ட நாட்களாக நீடித்து வரும் பதற்றத்தை தணிக்கும் வகையில் கிழக்கு லடாக்கில் பாங்காங் த்சோ ஏரியை ஒட்டியுள்ள பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள ராணுவத்தை திரும்பப்பெற மீண்டும் இருதரப்பினரும் ஒப்புக்கொண்டுள்ளனர். இந்தியாவும் சீனாவும் அடுத்த 3 நாட்களுக்கு தினமும் 30 சதவீத துருப்புகளை திரும்பப் பெறவும், மூன்று கட்டங்களாக படைகள் விலக்கிக் கொள்ளப்படும் என்றும், இந்த ஒப்பந்தத்தின் கீழ் இரு நாடுகளின் வீரர்கள் இந்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நிறுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து படைகளை விலகிக் கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆனாலும் எந்த தேதியில் திரும்பப் பெறப்படும் என்ற தகவல் குறிப்பிடப்படவில்லை. அதாவது நவம்பர் -6 தேதி சுஷூலில் நடந்த தளபதிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையில் படைகளை திரும்பப் பெறுவது குறித்து விவாதிக்கப்பட்டது. இந்தியா சார்பில் வெளி விவகார அமைச்சகத்தின் இணைச் செயலாளரும் ராணுவ நடவடிக்கை இயக்குனருமான, ஜெனரல் மற்றும் பிரிகேடியர் காய் கலந்து கொண்டார். இது தொடர்பாக வெளியான தகவலின்படி, பேச்சுவார்த்தை ஒருவாரம் நீடித்ததாகவும், அதில் மூன்று நாட்கள் மூன்று கட்டங்களாக படைகளை திரும்பப் பெற ஒப்புக்கொள்ளப்பட்டதாகவும்,  கூறப்படுகிறது. அதன்படி முதற்கட்டமாக டாங்கிகள், கவச வாகனங்கள் மற்றும் துருப்புகளை எல்லையில் இருந்து ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு நகர்த்தப்படும். பேச்சுவார்த்தையில் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் படி ஒரு நாளுக்குள் டாங்கிகள் மற்றும் வீரர்கள் அகற்றப்பட வேண்டும்.  

இரண்டாவது கட்டத்தில் பாங்கொங் த்சோவின் வடக்கு கரையில் இருந்து மூன்று நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் சுமார் 30% துருப்புகளை திரும்பப் பெற வேண்டும். இதன் பின்னர் இந்திய வீரர்கள் தங்கள் நிர்வாக தன்சிங் தாபா பதவிக்கு அருகில் வருவார்கள். அதேநேரத்தில் விரல் 8 பகுதி முன்பைபோலவே அதன் இயல்பு நிலைக்கு திரும்ப சீனா ஒப்புக் கொண்டுள்ளது.

மூன்றாவது மற்றும் இறுதி கட்டத்தில் இரு தரப்பினரும் பாங்கொங் த்சோ ஏரி பகுதியின் தெற்கு  கரையிலும் சுஷுல் மற்றும் ரெஜாங் லாவைச் சுற்றியுள்ள மலைப்பகுதிகளிலும்  தங்கள் ஆக்கிரமிப்பை காலி செய்ய வேண்டும். இந்த விலகலை இருநாடுகளும் கண்காணிக்கும், அதேபோல இந்தப் படை வீரர்களை கண்காணிக்க இருநாடுகளும் கண்காணிப்பு மற்றும் பரஸ்பர தொடர்புக்கு ஆளில்லா வான்வழி வாகனங்களை பயன்படுத்தவும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. அதேநேரத்தில் கல்வான் பள்ளத்தாக்கின் மோதலுக்கு பிறகு இந்த விவகாரத்தில் இந்திய தரப்பு மிகவும் கவனமாகவும் செயல்பட திட்டமிட்டுள்ளது.

இச்சம்பவத்துக்கு பிறகு சீனாவின் மீதான நம்பிக்கையை இந்தியா முற்றிலுமாக இழந்துள்ளது. எனவே இந்த பகுதியில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்களை இந்தியா நிறுத்தியதற்கு இதுவே காரணம் எனவும், அதே நேரத்தில் குளிர் காலத்தில் படைகளை இந்த பகுதியில் நிறுத்த இந்தியா திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 

click me!