பக்கத்துல வராத உங்களுக்கு குறைசொல்ல தகுதியில்லை... ஸ்டாலினை தாறுமாறாக விளாசும் எடப்பாடி பழனிச்சாமி..!

By vinoth kumarFirst Published Oct 31, 2019, 1:26 PM IST
Highlights

அரசை குறை சொல்வதையே ஒரு பிழைப்பாக எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் வைத்துள்ளார் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்துள்ளார். குழந்தை விழுந்துவிட்டால் ஆழ்துளை கிணறு அருகேயே செல்லாதவர்கள் திமுக அமைச்சர்கள் என முதல்வர் ஆவேசத்துடன் பேசினார்.

அரசை குறை சொல்வதையே ஒரு பிழைப்பாக எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் வைத்துள்ளார் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்துள்ளார். குழந்தை விழுந்துவிட்டால் ஆழ்துளை கிணறு அருகேயே செல்லாதவர்கள் திமுக அமைச்சர்கள் என முதல்வர் ஆவேசத்துடன் பேசினார்.

சேலம் மாவட்டம் ஓமலூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் பழனிசாமி பல்வேறு தரப்பினரும் முயற்சி செய்தும் குழந்தை சுஜித்தை உயிருடன் மீட்க முடியவில்லை என்பது மிகுந்த வேதனையளிக்கிறது. மணப்பாறையில் அமைச்சர்கள் 4 நாட்கள் தங்கி பணியாற்றினர். தீபாவளி மழையை பொருட்படுத்தாமல் அதிகாரிகள் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். ஆனால் அதைக்கூட மு.க.ஸ்டாலின் கொச்கைப்படுத்துகிறார்.

குழந்தை சுஜித் விவகாரத்தில் காழ்ப்புணர்ச்சியுடன் மு.க.ஸ்டாலின் பேசுவது வருத்தமளிக்கிறது. அரசை குறை சொல்ல வேண்டுமென்ற நோக்கத்தில் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார். ராணுவ வீரர்களுக்கு துப்பாக்கிச்சுடும் பயிற்சி மட்டுமே அளிக்கப்படுகிறது என்பது கூட தெரியவில்லை என குறிப்பிட்டார். இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்கக் கூடாது. ஆழ்துளை கிணறுகள் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்றார். 

2009-ம் ஆண்டு தேனி மாவட்டத்தில் 6 வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்தபோது திமுக அமைச்சர்கள் யாரும் அதன் அருகிலேயே போகவில்லை. அவர்களிடம் ஏன் போகவில்லை, ஏன் மீட்கவில்லை என கேட்டதில்லை. ஆனால், 4 நாட்களாக அமைச்சர்கள் அங்கேயே தங்கி மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டதை கொச்சைப்படுத்துகிறார். 

மேலும், நோயாளிக்கு சிகிச்சை அளிக்காமல் பணி வர மறுக்கும் மருத்துவர்களை தமிழக அரசு வேடிக்கை பார்த்துகொண்டு இருக்காது. மருத்துவர்கள் உடனடியாக போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டால் அமைச்சர் அறிவித்தப்படி பணிக்கு திரும்பாத மருத்துவர்களின் பணியிடங்கள் காலியிடமாக அறிவிக்கப்படும் என முதல்வர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். அரசுக்கு நெருக்கடி கொடுக்கவே அங்கீகரிக்கப்படாத மருத்துவர் சங்கம் போராட்டத்தில் ஈடுபடுகிறது என தெரிவித்தார். 

click me!