பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வாசித்த புகார் பட்டியல்… முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் அழைத்து விசாரித்த ஆளுநர்.!

By manimegalai aFirst Published Oct 13, 2021, 7:41 PM IST
Highlights

ஆளுநர் உடனான சந்திப்பின்போது, நீட் தேர்வு மசோதவுக்கான ஒப்புதல் குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தததாக கூறப்படுகிறது.

ஆளுநர் உடனான சந்திப்பின்போது, நீட் தேர்வு மசோதவுக்கான ஒப்புதல் குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தததாக கூறப்படுகிறது.

 

தமிழ்நாட்டில் ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகளுக்கு மத்தியில், ஆளுநர் ஆர்.என்.ரவி, நிகழ்த்தியிருக்கும் சந்திப்புகள் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக பதவியேற்றுள்ள ஆர்.என்.ரவியை நேற்றையதினம் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்து பேசினார். அப்போது, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, உள்ளிட்ட பாஜக தலைவர்களும் உடனிருந்தனர்.

அண்ணாமலையும், ஆளுநரும் முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரிகள் என்பதால் இந்த சந்திப்பு தமிழக அரசியலில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது. ஆளுநர் உடனான சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, திமுக அரசு பொறுப்பேற்ற பின்னர் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகவும், சமீபட்தில் நடந்துள்ள கொலைகள் குறித்து ஆளுநரிடம் எடுத்துரைத்ததாகவும் தெரிவித்தார்.

உள்ளாட்சி தேர்தலில் அமோக வெற்றி என்ற உற்சாகத்தில் இருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று மாலை திடீரென ஆளுநரை நேரில் சந்தித்து பேசினார். அப்போது, தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்ட நீட் விலக்கு மசோதாவிற்கான ஒப்புதல் குறித்து ஆளுநரிடம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.

முன்னதாக ஊரடங்கு தளர்வுகள் குறித்து அமைச்சர்கள், மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தியிருந்தார். இந்தநிலையில் தம்மை சந்திக்க வந்த முதலமைச்சரிடம், கொரோனா தடுப்பு பணிகள் குறித்தும், சட்டம் ஒழுங்கு நிலை குறித்தும் ஆளுநர் விளக்கம் கேட்டதாகவும் கூறப்படுகிறது. முதலமைச்சர் – ஆளுநர் சந்திப்பின்போது திமுக மூத்த தலைவரும், அமைச்சருமான துரைமுருகனும் உடனிருந்தார்.

click me!