தமிழகத்திற்கு ஒளிமயமான எதிர் காலம்... கே.எஸ்.அழகிரி பெருமிதம்..!

Published : Oct 13, 2021, 06:34 PM IST
தமிழகத்திற்கு ஒளிமயமான எதிர் காலம்... கே.எஸ்.அழகிரி பெருமிதம்..!

சுருக்கம்

 தமிழகத்திற்கு ஒளிமயமான எதிர்காலத்தை அமைக்கிற பணியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து செயல்படுவார் 

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக அமோக வெற்றி நிலையில் தமிழகத்திற்கு ஒளிமயமான எதிர்காலம் அமைய இருக்கிறது என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி கூறியுள்ளார். 

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக நடபெற்ற தேர்தல் முடிவுகளின்படி, பெரும்பாலான இடங்களில் திமுக அமோக வெற்றி பெற்றுள்ளது.

இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள பதிவில், ’’ஊரக உள்ளாட்சித் தேர்தல் வெற்றி மூலமாக தமிழகம் தொடர்ந்து வளர்ச்சி பாதையில் தடையின்றி பயணம் செய்வதற்கான வாய்ப்பு அருமையாக அமைந்திருக்கிறது. இதன்மூலம் தமிழகத்திற்கு ஒளிமயமான எதிர்காலத்தை அமைக்கிற பணியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து செயல்படுவார் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!