10ம் வகுப்பு பொதுத்தேர்வு கண்டிப்பாக நடத்தப்படும்.. முதல்வர் பழனிசாமி திட்டவட்டம்

Published : Apr 09, 2020, 02:57 PM IST
10ம் வகுப்பு பொதுத்தேர்வு கண்டிப்பாக நடத்தப்படும்.. முதல்வர் பழனிசாமி திட்டவட்டம்

சுருக்கம்

10ம் வகுப்பு பொதுத்தேர்வு கண்டிப்பாக நடத்தப்படும் என்றும் எப்போது நடத்தப்படும் என்று முதல்வர் பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.  

கொரோனா பாதிப்பு இந்தியளவில் தினம் தினம் அதிகரித்துவருகிறது. பாதிப்பு எண்ணிக்கை தினமும் புதிய உச்சத்தை எட்டிவருகிறது. தமிழ்நாட்டில் கொரோனாவால் 738 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தினமும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், ஊரடங்கை 14ம் தேதிக்கு பிறகும் நீட்டிப்பது குறித்த ஆலோசனை நடந்துவருகிறது. 

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணைப்படுத்தப்பட்ட தேதிகளில் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தி முடிக்கப்பட்டுவிட்டது. ஆனால் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படவில்லை. 

கொரோனா பாதிப்பு குறைந்து நிலைமை சீரடைந்த பின்னரே 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதியை உறுதி செய்யப்படும் என்பதால் இதுவரை பொதுத்தேர்வு குறித்த கால அட்டவணை அப்டேட் செய்யப்படவில்லை. இதற்கிடையே, கல்வியாளர்கள், ராமதாஸ், வைகோ உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், ஆசிரியர் சங்கம் ஆகியோர் தரப்பில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. 

இதனால் 10ம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு நடக்குமா நடக்காதா என்ற சந்தேகம் இருந்துவருகிறது. இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு கண்டிப்பாக நடத்தப்படும் என்பதை திட்டவட்டமாக உறுதிப்படுத்தினார். 

மேலும் பொதுத்தேர்வு எப்போது நடத்தப்படும் என்பது குறித்து ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். எனவே 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடப்பது உறுதி. 

PREV
click me!

Recommended Stories

நாளை தவெக வில் சேருகிறார் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்..! டெல்டாவை தட்டி தூக்க பக்கா ஸ்கெட்ச்
ஜி.கே.மணி மனுசனே இல்ல.. அப்பாவையும், என்னையும் பிரிச்சிட்டாரு.. போட்டுத் தாக்கிய அன்புமணி!