பாரம்பரிய இசை நகரம் சென்னை - யுனெஸ்கோவுக்கு நன்றி தெரிவித்தார் முதல்வர் 

 
Published : Nov 08, 2017, 08:55 PM ISTUpdated : Sep 19, 2018, 01:24 AM IST
பாரம்பரிய இசை நகரம் சென்னை - யுனெஸ்கோவுக்கு நன்றி தெரிவித்தார் முதல்வர் 

சுருக்கம்

Chief Minister Palanisamy thanked UNESCO for adding Chennai to the list of the best creative cities.

சிறந்த படைப்பாக்க நகரங்கள் பட்டியலில் சென்னையை சேர்த்த யுனெஸ்கோவுக்கு முதலமைச்சர் பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார். 

ஐக்கிய நாடுகள் அமைப்பின் அங்கமான யுனெஸ்கோ அமைப்பு கைவினைப் பொருள்கள் மற்றும் நாட்டுப்புறக் கலை, நகர வடிவமைப்பு, திரைப்படம், கேஸ்ட்ரானமி இலக்கியம், ஊடகக் கலை மற்றும் இசை என 7 பிரிவுகளில் சிறப்பான பங்களிப்பு கொடுக்கும் நகரங்களை கிரியேட்டிவ் சிட்டீஸ் என்ற அடைமொழியுடன் அங்கீகாரம் அளிக்கப்பட்டு வருகிறது. 

கடந்த 2004-ம் ஆண்டு முதல் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நகரங்களை இந்தப் பட்டியலில் இணைத்து யுனெஸ்கோ அமைப்பு ஊக்கப்படுத்தி வருகிறது. 

அதன்படி, பாரம்பரிய இசைக்கு சென்னை அளித்து வரும் பங்களிப்பைக் கௌரவிக்கும் வகையில் கிரியேட்டிவ் சிட்டீஸ் பட்டியலில் சென்னையையும் யுனெஸ்கோ அமைப்பு சேர்த்தது. 

இந்தாண்டில் சென்னையுடன் சேர்த்து நகர வடிவமைப்புக்காகத் துபாய், இலக்கியத்துக்காகத் தென்னாப்பிரிக்காவின் டர்பன் உள்ளிட்ட 64 நகரங்கள் யுனெஸ்கோவின் கிரியேட்டிவ் சிட்டீஸ் பட்டியலில் புதிதாக இணைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் சிறந்த படைப்பாக்க நகரங்கள் பட்டியலில் சென்னையை சேர்த்த யுனெஸ்கோவுக்கு முதலமைச்சர் பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார். 

சென்னையின் வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் யுனெஸ்கோ பாராட்டியது நமக்கெல்லாம் பெருமை என்று  முதலமைச்சர் பழனிசாமி பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

இபிஎஸ்.. ஸ்டாலின்.. விஜய்... யார் முதல்வரானாலும் மக்கள் அந்த கொடூரத்தை அனுபவிப்பார்கள்..! பீதி கிளப்பும் உண்மை..!
திமுக- காங்கிரஸ் செய்த வரலாற்றுப் பிழை.. நடுக்கடலில் தவிக்கும் மீனவர்கள்.. இபிஎஸ் வேதனை!