தும்மினால் கூட குறை கண்டுபிடிக்கிறார்கள்.! திருமணத்திற்கு தேதி கொடுத்து விட்டு பயந்தேன்..! - மு க ஸ்டாலின்

By Ajmal KhanFirst Published Dec 18, 2022, 2:27 PM IST
Highlights

 தும்மினால் போதும், அதைக் கண்டுபிடித்து, அதை சொல்போனில் புகைப்படம் எடுத்து, அதை வெளியிடக்கூடிய ஊடகங்களெல்லாம் இன்றைக்கு இருக்கிறது. அந்த அளவிற்கு இன்றைக்கு சோசியல் மீடியா வளர்ந்து இருக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சுற்றுப்பயணத்தில் தூங்கும் நாசர்

பால்வளத்துறை அமைச்சர் நாசர் இல்ல திருமண விழா திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் நடைபெற்றது. இந்த திருமணத்தை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் நடத்தி வைத்தார். இதனை தொடர்ந்து திருமண விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், திமுக இளைஞர் அணிச்செயலாளராக இருக்கும் போது தமிழகத்தில் சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறபோது, எனக்குத் துணைக்கு ஒரு மூன்று பேர் வருவார்கள், நாசர் வருவார், அடுத்தது பல்லாவரம் பகுதியைச் சார்ந்த சிங்காரம் வருவார், அதேபோல் நாகையைச் சார்ந்த அசோகன் ஆகிய மூன்று பேர்தான் இணைபிரியாமல் எப்போதும் என்னுடைய சுற்றுப்பயணத்தில் வருவார்கள். ஆனால் துணைக்கு வருவார்களே தவிர, அதிகமாக அந்த வேனில் தூங்கிக்கொண்டு வந்தது யார் என்று கேட்டீர்களானால், நாசர்தான்.

சி.வி சண்முகத்தின் அறிவுரையோ, ஆலோசனையோ பாஜகவிற்கு தேவையில்லை.. கடுப்பான தமிழக பாஜக !

தூங்காமல் இருக்க மாத்திரை போட்டார்

இதை எதற்காக நான் சொல்கிறேனென்றால், அடிக்கடி தூங்கிக்கொண்டு வரும்போது அவரை எழுப்புவதுண்டு. எனக்கு துணைக்கு வந்தாயா? அல்லது உனக்கு நான் துணைக்கு வந்திருக்கிறேனா என்று கேட்டு நான் எழுப்புவதுண்டு. அதனால் என்ன செய்வார் என்றால், எப்போதும் தூக்கம் வருவதற்குத்தான் மாத்திரை போட்டுப் பார்த்திருக்கிறோம். உடல்நலம் சரியில்லாதவர்கள், தூக்கம் வராதவர்கள் தூக்க மாத்திரை போட்டுப் பார்த்திருக்கிறோம். ஆனால் நாசர் என்ன செய்வார் என்றால், தூக்கம் வராமல் இருப்பதற்கு மாத்திரை போட்டுவிட்டு வருவார், அப்படியிருந்தும் தூங்குவார். அப்படிப்பட்ட நிலையில் அவருடன் பயணம் செய்த நிகழ்ச்சிகளையெல்லாம் நான் நினைத்துப் பார்க்கிறேன்.

திருமணத்திற்கு தேதி கொடுத்துவிட்டு பயந்தேன்

எதைச் செய்தாலும், அதில் ஒரு பிரம்மாண்டம் இருக்கும். திருமணத்திற்குத் தேதி கொடுத்தேன், தேதியை கொடுத்தவுடன் எனக்கு பயம் வந்துவிட்டது. ஏனென்றால், இவர் ஆடம்பரமாக செய்துவிடுவாரே, பிரம்மாண்டமாக செய்துவிடுவாரே, அதனால் ஏதாவது விமர்சனம் வந்துவிடுமே, நாசராக இருந்து விமர்சனம் வந்தால் பிரச்சினையில்லை, ஆனால் அமைச்சர் பொறுப்பிலே இருக்கக்கூடிய நாசருக்கு ஏதாவது இழுக்கு வந்துவிட்டால், அதை விமர்சனம் செய்ய பலபேர் காத்துக் கொண்டிருக்கிறார்கள். தும்மினால் போதும், அதைக் கண்டுபிடித்து, அதை சொல்போனில் புகைப்படம் எடுத்து, அதை வெளியிடக்கூடிய ஊடகங்களெல்லாம் இன்றைக்கு இருக்கிறது. அந்த அளவிற்கு இன்றைக்கு சோசியல் மீடியா வளர்ந்து இருக்கிறது. அதனால், நான் அவரை அழைத்து சொன்னேன், "மிகவும் எளிமையாக இருக்க வேண்டும், மிகவும் அமைதியாக இருக்க வேண்டும், கட்சிக் கொடியை எவ்வளவு வேண்டுமானாலும் கட்டுங்கள். 

ஜெயலலிதாவிற்கு என்னை பிடிக்காதா..? எங்களைப்பற்றி பேச சசிகலாவிற்கு எந்த அருகதையும் இல்லை..! ஜெ.தீபா ஆவேசம்

பேனர் வைக்க வேண்டாம்

ஏனென்றால், கலைஞர் அவர்கள் அந்தக் கொடியை ஏற்றி வைத்து இந்த இயக்கத்தை வளர்த்து இருக்கிறார். அதற்கு நான் கட்டுப்பாடு சொல்ல மாட்டேன். ஆனால் பேனர் வேண்டாம், கட்-அவுட் வேண்டாம், அமைதியாக, ஆரவாரம் இல்லாமல், ஆனால் அதே நேரத்தில் இந்த இயக்கத்திற்கு வலுசேர்க்கின்ற வகையில் நீ உன்னுடைய பணியை அமைத்துக் கொள்ள வேண்டும்" என்று நான் கேட்டுக் கொண்டேன். அதை அப்படியே ஏற்று இந்தத் திருமணத்தை நடத்தி வைத்திருக்கிறார் என்று சொன்னால், உள்ளபடியே அதற்காகவே நான் நாசர் அவர்களுக்கு என்னுடைய பாராட்டுகளை, வாழ்த்துகளை, நன்றியைத் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

இதையும் படியுங்கள்

ரபேல் வாட்ச் வாங்கியது எப்படி..? செந்தில் பாலாஜியின் கேள்விக்கு பதிலடி கொடுத்த அண்ணாமலை

click me!