டெல்டா மாவட்டங்களில் முதலமைச்சர் இரண்டு நாள் ஆய்வு.. தூர்வாரும் பணிகளை பார்வையிடுகிறார்..

Published : May 29, 2022, 03:55 PM IST
டெல்டா மாவட்டங்களில் முதலமைச்சர் இரண்டு நாள் ஆய்வு.. தூர்வாரும் பணிகளை பார்வையிடுகிறார்..

சுருக்கம்

குறுவை சாகுப்படிக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டிருக்கும் நிலையில் நாளையும் நாளை மறுநாளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்ய உள்ளார்.  

வரலாற்றிலே முதல் முறையாக குறுவை சாகுப்படிக்காக மேட்டூர் அணையிலிருந்து மே மாதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் பெய்த தொடர் கனமழை காரணமாக காவேரி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்தது. இதனை தொடர்ந்து கடந்த மே 24 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீரை திறந்து விட்டார். கடந்த 2 ஆண்டுகளாக ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் விடப்பட்ட நிலையில், இந்த முறை முன்னதாகவே திறந்தவிடப்பட்டது. 

இதனையடுத்து , அணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர், கடைமடை வரை சென்றடைய டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மற்றும் நாளை மறுநாள் டெல்டா மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். இந்த ஆய்வின் போது , டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகள் மற்றும் வடிகால் பணிகளை பார்வையிடுகிறார்.

இதற்காக நாளை காலை சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை செல்லும் முதல்வர், அங்கிருந்து சாலை மார்க்கமாக புதுக்கோட்டைக்கு செல்லவுள்ளார். புதுக்கோட்டையில் 3 இடங்களில் ஆய்வு செய்கிறார் முதல்வர். பின் நாளை மறுநாள், நாகை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி மாவட்டங்களில் ஆய்வு செய்ய உள்ளார்.சுமார் 15 க்கும் மேற்பட்ட இடங்களில் ஆய்வு செய்து விவசாயிகளின் கருத்துகளை கேட்டறிய உள்ளார்.

மேலும் படிக்க: சந்தை வரி விதித்த தமிழக அரசு...? உணவு பொருட்களின் விலை அதிகரிக்க வாய்ப்பு..! ஓபிஎஸ் எச்சரிக்கை

PREV
click me!

Recommended Stories

இப்படியொரு ப்ளானா..? விஜயின் டபுள் ஸ்டாண்ட் ..! என்.டி.ஏ கூட்டணிக்கு கேட் போடும் ராகுல்..! திமுகவுக்கு திருகுவலி..!
திருமா தில்லுமுல்லு நாடகம்போடுகிறார்..! பட்டியல் சமூக மக்களுக்காக போராடுவது பாமகதான்..! வழக்கறிஞர் பாலு பளீர்..!