வழக்கை காப்பாற்றிக்கொள்ள படாத பாடுபடுகிறார்...! உண்மையை வெளியிட்ட எடப்பாடியுடன் இருந்த முன்னாள் அமைச்சர்...! 

Asianet News Tamil  
Published : Jan 05, 2018, 03:27 PM ISTUpdated : Sep 19, 2018, 01:47 AM IST
வழக்கை காப்பாற்றிக்கொள்ள படாத பாடுபடுகிறார்...! உண்மையை வெளியிட்ட எடப்பாடியுடன் இருந்த முன்னாள் அமைச்சர்...! 

சுருக்கம்

Chief Minister Edappadi palanisamy is not administering

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கே நிர்வாகத்திறமை இல்லை எனவும் அவருடைய வழக்குகளை காப்பாற்றிக்கொள்ளவே தற்போது செயல்பட்டு வருகின்றார் எனவும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். 

ஊதிய உயர்வு வழங்க வேண்டும், அடிப்படை ஊதியத்தை குறைந்தபட்சம் 20, 700 ஆக உயர்த்த வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் போக்குவரத்து தொழிலாளர்கள் சார்பில் முன் வைக்கப்பட்டன.

ஆனால் போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்க அரசு முன்வரவில்லை. பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டப்படவில்லை. 

இந்நிலையில், போக்குவரத்து ஊழியர்கள் நேற்றுமுதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தமிழகம் முழுவதும் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. 

போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்தால் தனியார் ஓட்டுனர்களை வைத்து பேருந்தை இயக்க அரசு மும்முரம் காட்டி வருகின்றது. 

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த பதவி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ செந்தில்பாலாஜி, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கே நிர்வாகத்திறமை இல்லை எனவும் அவருடைய வழக்குகளை காப்பாற்றிக்கொள்ளவே தற்போது செயல்பட்டு வருகின்றார் எனவும்  தெரிவித்தார். 

மேலும் தற்போது நடைபெற்று வரும் அரசு கூவத்தூர் அரசு எனவும் பதவியில் அமர்த்திய சசிகலாவுக்கே துரோகம் செய்த அரசு எனவும் குறிப்பிட்டார். 

PREV
click me!

Recommended Stories

பாமக பொதுக்குழுவில் கண்ணீர் சிந்திய ராமதாஸ்... கதறிய தொண்டர்கள்!
தேர்தலுக்கு பின் அன்புமணி பூஜ்ஜியமாவார் - ராமதாஸ் முன்னிலையில் கொந்தளித்த அருள்