
தவறான வழியில் செல்லும் பலரை திருத்தி நல்ல வழியில் கொண்டு வருவேன் எனவும், டிடிவியை போலவே பலபேரை பார்த்துவிட்டோம் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெற்று வருகிறது.
அதன்படி இன்று கரூரில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெற்று வருகிறது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, தவறான வழியில் செல்லும் பலரை திருத்தி நல்ல வழியில் கொண்டு வருவேன் எனவும், டிடிவியை போலவே பலபேரை பார்த்துவிட்டோம் எனவும் தெரிவித்தார்.
மேலும், மக்கள் நலத்திட்டங்களுக்காகவே ஆட்சி நடத்துவதாகவும் எதிர்கட்சிகள் வெண்டுமென்றே பொய் கூறி வருகின்றனர் எனவும் குறிப்பிட்டார்.
கரூர் மாவட்டத்திற்கு செந்தில்பாலாஜி அவப்பெயர் ஏற்படுத்தி விட்டார் எனவும், அவரை பற்றி நன்றாக புரிந்து கொண்டு விட்டோம் எனவும் தெரிவித்தார்.
எங்களது அனுபவம் தான் டிடிவி தினகரனின் வயது எனவும் அரசு கொண்டுவரும் திட்டங்களுக்கு குறுக்கே நிற்பவர்களுக்கு மக்கள் பாடம் கற்பிப்பார்கள் எனவும் தெரிவித்தார்.