முதல்வர் பதவியை நினைத்து கூட பார்க்கவில்லை.. நடிகர் ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு..!

By vinoth kumarFirst Published Mar 12, 2020, 11:08 AM IST
Highlights

கட்சி பதவியை சிலர் தொழிலாக வைத்துள்ளதால் முறைகேடுகள் நடைபெறுகிறது. அத்தியாவசியமாக கட்சி நடத்த எத்தனை பதவி தேவையோ அது இருந்தால் மட்டும் போதும். படித்தவர்கள், சிந்தனையுள்ளவர்கள், தன்மானம் உள்ளவர்களை முதல்வராக அமரவைப்போம். 1996-ம் ஆண்டு கூட எனக்கு வாய்ப்பு வந்தது. ஆனால், நான் முதல்வராக விரும்பவில்லை. முதல்வர் பதவியை நான் நினைத்து கூட பார்த்தது இல்லை.

கட்சியில் நான் தலைவர் மட்டுமே, முதல்வர் பதவியை விரும்பவில்லை என நடிகர் ரஜினிகாந்த அதிரடியாக அறிவித்துள்ளார். 

சென்னையில் மார்ச் 5-ம் தேதி நடிகர் ரஜினிகாந்த் தலைமையில் ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 37 மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றனர். அந்தக் கூட்டத்தில் மாவட்டங்களில் ரஜினிக்கு உள்ள ஆதரவு, புதிய கட்சி தொடங்குவது, மன்றத்தின் உறுப்பினர் சேர்க்கை உள்பட பல விஷயங்கள் பற்றி பேசப்பட்டதாக தகவல் வெளியானது.

கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, “பல விஷயங்கள் தொடர்பாக பேசினோம். மாவட்ட செயலாளர்கள் பல கேள்விகள் எழுப்பினர். அவர்களுக்கு பதில் அளித்தேன். அதில் அவர்கள் திருப்தி அடைந்தார்கள். ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் எனக்கு ஏமாற்றம். அது என்ன என்பதை பின்னர் தெரிவிக்கிறேன்” என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார். ரஜினியின் அந்த ஏமாற்றம் என்ன என்பது மீண்டும் விவதமாகக் கிளம்பிவிட்டது.

மேலும், 3 கேள்விகளை நடிகர் ரஜினிகாந்த் எழுப்பியதாகவும், கட்சி ஆட்சிக்கு வந்து அமைச்சரனால், கட்சி பதவி பறிக்கப்படும், இளைஞர்களுக்குத் தேர்தலில் போட்டியிட அதிக வாய்ப்பு அளிக்கப்படும், கட்சி ஆட்சிக்கு வந்தால், தான் அதிகாரத்துக்கு வரமாட்டேன் என்று கட்சித் தலைவராக மட்டுமே செயல்படுவேன் என்று ரஜினி கூறினார் என்றும் இரண்டு விஷயங்களை ஏற்றுக்கொண்ட மா.செ.க்கள், முதல்வர் பதவி ஏற்கமாட்டேன் என்று ரஜினி சொன்னதை ஏற்கவில்லை. அதுதான் அவருடைய ஏமாற்றம் என்று பல்வேறு தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், அனைத்து சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதால் சென்னை லீலா பேலஸ் ஹேட்டலில் நடிகர் ரஜினிகாந்த் பேட்டியளித்து வருகிறார். அதில், மாவட்ட செயலாளர்களுடனான ஆலோசனையில் ஒரு விஷயத்தில் ஏமாற்றம் என கூறியிருந்தேன். ஆனால், நான் கூறிய விஷயங்கள் ஊடகங்களில் பலவிதமாக வதந்தி பரப்பியதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே வந்துள்ளேன். ஆனால், மாவட்ட செயலாளர்கள் தரப்பில் இருந்து எந்த விஷயமும் வெளியே வராததால் பாராட்டுகிறேன். எனது வருங்கால அரசியல் குறித்து பேசிவிட்டால் தெளிவுவரும் என கூறினார். 

மேலும், அவர் பேசுகையில், கட்சி பதவியை சிலர் தொழிலாக வைத்துள்ளதால் முறைகேடுகள் நடைபெறுகிறது. அத்தியாவசியமாக கட்சி நடத்த எத்தனை பதவி தேவையோ அது இருந்தால் மட்டும் போதும். படித்தவர்கள், சிந்தனையுள்ளவர்கள், தன்மானம் உள்ளவர்களை முதல்வராக அமரவைப்போம். 1996-ம் ஆண்டு கூட எனக்கு வாய்ப்பு வந்தது. ஆனால், நான் முதல்வராக விரும்பவில்லை. முதல்வர் பதவியை நான் நினைத்து கூட பார்த்தது இல்லை.

முதலமைச்சர் பதவி வேண்டாம் என நான் கூறினேன். ஆனால், நான் முதல்வராக விரும்பவில்லை என்பதை பலர் ஒத்துக்கொள்ளவில்லை. முதல்வர் பதவிக்கு நீங்கள் போட்டியிடவில்லை எனில் அரசியல் எடுபடாது என பலர் கூறினர் என்றார். கட்சிக்கு ஒரு தலைமை ஆட்சிக்கு ஒரு தலைமை என்பதே எனது முடிவு என நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். 

click me!