ராஜாஜி , அண்ணா இடத்தில் சசிகலாவா?? - ப.சிதம்பரம் வேதனை

Asianet News Tamil  
Published : Feb 06, 2017, 01:08 PM ISTUpdated : Sep 19, 2018, 01:04 AM IST
ராஜாஜி , அண்ணா இடத்தில் சசிகலாவா?? - ப.சிதம்பரம் வேதனை

சுருக்கம்

ராஜாஜி,  அண்ணா போன்றோர் அமர்ந்த நாற்காலியில் சசிகலா போன்றோர் அமர்வது வேதனையாக இருக்கிறது என்று ப.சிதம்பரம் வேதனை தெரிவித்துள்ளார். 

அதிமுகவில் ஜெயலலலிதா மறைவுக்கு பிறகு தமிழக அரசியலில் பல மாற்றங்கள் நடந்துள்ளது. ஓபிஎஸ் முதல்வராக பொறுப்பேற்றார். அதன் பின்னர் நேற்று நடந்த கூட்டத்தில் சசிகலா முதல்வருக்காக எம்.எல்.ஏக்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

விரைவில் அவர் பதவி ஏற்க உள்ளார். சசிகலா முதல்வராக வருவது பலரிடமும் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. திருமாவளவன் , ஜி.ராமகிருஷ்ணன் தவிர வேறு யாரும் வரவேற்கவில்லை. இந்நிலையில் இதுபற்றி காங்கிரஸ் முத்த தலைவர் பா.சிதம்பரமும் வாய் திறந்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ,

ராஜாஜி, காமராஜர், அண்ணா போன்றோர் அமர்ந்த முதல்வர் நாற்காலியில் யார் அமரபோகிறார்கள் என்பது வேதனையளிக்கிறது. ஆட்சியில் யார் அமர இருக்கிறார்கள் என்பது குறித்து கேள்வி கேட்க மக்களுக்கு அதிகாரம் உள்ளது.

அதிமுகவினரின் தேர்வு சசிகலாவாக இருக்கலாம் ஆனால் சசிகலா முதல்வராக தேர்தெடுக்கப்பட்டதில் மக்கள் ஒரு பக்கமும், அதிமுக மறு பக்கத்திலும் உள்ளது. இவ்வாறு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து வெளியிட்டுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிடுகிறேன்.. கூட்டணி முடிவாகும் முன்பே தொகுதியை உறுதி செய்த டிடிவி
தவெக-வில் நடிகர் கவுண்டமணி..? ஐயோ ராமா... விஜய்க்காக இந்த முடிவை எடுத்தாரா..?