இறங்கி அடிக்கும் ப.சிதம்பரம்..! அதிர்ச்சியில் காங்கிரஸ் நிர்வாகிகள்..! கலகலக்கும் சத்தியமூர்த்தி பவன்..!

By vinoth kumarFirst Published Dec 29, 2019, 11:00 AM IST
Highlights

தன்னை எப்போதுமே ஜென்டில்மேன் அரசியல்வாதியாக அடையாளப்படுத்திக் கொள்வது ப.சிதம்பரம் ஸ்டைல். ஆர்பாட்டம், போராட்டம் என்றால் கூட தனது சொந்த தொகுதியான சிவகங்கையை தாண்டி அவர் அண்மைக்காலத்தில் வேறு எங்கும்வந்தது இல்லை. காரைக்குடி, சிவகங்கை, புதுக்கோட்டை போன்ற ஊர்களில் பொதுக்கூட்டங்களில் ப.சிதம்பரம் கலந்து கொண்டால் தேர்தல் வருகிறது என்று அர்த்தம்.

சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு அடிபட்ட புலி போல் ப.சிதம்பரம் தீவிர அரசியலில் ஈடுபட்டுள்ளது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் வயிற்றில் புளியை கரைத்துள்ளது.

தன்னை எப்போதுமே ஜென்டில்மேன் அரசியல்வாதியாக அடையாளப்படுத்திக் கொள்வது ப.சிதம்பரம் ஸ்டைல். ஆர்பாட்டம், போராட்டம் என்றால் கூட தனது சொந்த தொகுதியான சிவகங்கையை தாண்டி அவர் அண்மைக்காலத்தில் வேறு எங்கும்வந்தது இல்லை. காரைக்குடி, சிவகங்கை, புதுக்கோட்டை போன்ற ஊர்களில் பொதுக்கூட்டங்களில் ப.சிதம்பரம் கலந்து கொண்டால் தேர்தல் வருகிறது என்று அர்த்தம்.

அது ஏன் அவர் சொந்த ஊருக்கு வந்தால் கூட விரைவில் நாடாளுமன்ற தேர்தல் என்று நாம் எடுத்துக் கொள்ளலாம். அந்த அளவிற்கு டெல்லியை விட்டு நகராதவர் ப.சிதம்பரம். பலமுறை காங்கிரஸ் மேலிடம் கூறியும் தமிழக அரசியலில் அவர் ஆர்வம் காட்டியதில்லை. செய்தியாளர் சந்திப்பு என்றால் கூட டெல்லி காங்கிரஸ் தலைமையகத்தில் தான் அவரை பார்க்க முடியும். டெல்லியில் இருந்து சென்னை வரும் போது செய்தியாளர்கள் நெருங்கினால், ஏதோ அவர்கள் தீண்டத்தகாதரர்கள் போல நகர்ந்து செல்லக்கூடியவர் ப.சிதம்பரம். கடைசியாக பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது சென்னை விமான நிலையத்தில் ப.சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்ததாக நினைவு.

அதன்பிறகு, சிறையில் இருந்து அண்மையில் வெளியான ப.சிதம்பரத்திற்கு விமான நிலையத்தில் கார்த்தி சிதம்பரம் தனது ஆதரவாளர்களை வைத்து வரவேற்பு அளித்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த ப.சிதம்பரம் தற்போது நேரம் கிடைக்கும் போதெல்லாம் செய்தியாளர்களிடம் பேசுகிறார். பேட்டி என்றால், யார் என்றாலும் அழைத்துக் கொடுக்கிறார். இதற்கு காரணம் தீவிர அரசியலில் அவர் களம் கண்டிருப்பது தான் என்கிறார்கள்.

சென்னையில் திமுக நடத்திய பேரணியில் யாரும் எதிர்பாராத வகையில் ப.சிதம்பரம் கலந்து கொண்டார். காங்கிரஸ் நடத்திய போராட்டத்திலும் ப.சிதம்பரத்தை பார்க்க முடிந்தது. அவ்வளவு ஏன், கேரளாவில் நேற்று காங்கிரஸ் நடத்திய குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டு பசிதம்பரம் பேரணி சென்றதோடு அங்கு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தமிழில் பேசினார் ப.சி.

இப்படி திடீரென ப.சிதம்பரம் தீவிர அரசியலில் இறங்கியிருப்பது சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் நிர்வாகிகள் பலரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ப.சிதம்பரம் தீவிர அரசியலில் இறங்கினால் அவரது ஸ்டைல் வேறு மாதிரி இருக்கும் என்கிறார்கள். காங்கிரஸ் மேலிடத்துடன் நேரடி தொடர்பில் உள்ள ப.சிதம்பரத்தை எதிர்த்து இங்கு ஒன்றும் செய்ய முடியாது என்பதால் பல கோஷ்டிகள் கலக்கம் அடைந்துள்ளன.

click me!