சென்னை – ரஷ்யா இடையே கப்பல் போக்குவரத்து !! பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு !!

By Selvanayagam PFirst Published Sep 4, 2019, 9:31 PM IST
Highlights

ரஷியாவின் விளாடிவோஸ்டோக் நகரில் இருந்து சென்னைக்கு நேரடியாக முழுநேர கப்பல் போக்குவரத்து விரைவில் தொடங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
 

இரண்டு நாள் பயணமாக ரஷ்யா சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் ரஷ்யாவின் ஃபார் ஈஸ்ட் ரீஜியன் பகுதிக்குச் சென்றார். 

இதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடினுடன் இணைந்து ஸ்வெஸ்டா கப்பல் கட்டும் தளத்தை நேரில் பார்வையிட்டார். 


அப்போது, கப்பல் கட்டும் தளத்தில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுடன் மோடி கலந்துரையாடினார்

பின்னர், இரு நாட்டு அதிபர்கள் முன்னிலையில் இந்தியா-ரஷியா இடையில் பல்வேறு புதிய ஒப்பந்தங்களும் 13 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாகின. 


அப்போது அதிபர் புதினுடன் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரதமர் நரேந்திர மோடி 'இந்தியாவுக்கும் ரஷியாவுக்கும் இடையிலான நல்லுறவு இருநாடுகளின் தலைநகரங்களுக்கு மட்டும் இடையிலான உறவல்ல, இந்த நல்லுறவில் இருநாடுகளை சேர்ந்த அனைத்து மக்களும் இணைக்கப்பட்டுள்ளனர்.

அவ்வகையில், ரஷியாவின் விளாடிவ்ஸ்டோக் நகரில் இருந்து சென்னைக்கு நேரடியாக முழுநேர கப்பல் போக்குவரத்து தொடங்குவதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது’ என தெரிவித்தார்.

click me!