மெட்ரோ ரயில் நிலையத்திற்கு முன்னாள் முதல்வர்களின் பெயர்கள்... கெத்து காட்டும் எடப்பாடி பழனிசாமி..!

By vinoth kumarFirst Published Jul 31, 2020, 11:03 AM IST
Highlights

சென்னையில் ஆலந்தூர், சென்ட்ரல், புறநகர் பேருந்து நிலைய மெட்ரோ ரயில் நிலையங்கள் பெயர் மாற்றம் செய்து முதல்வர் பழனிசாமி அறிவிப்பை வெளியிட்டுள்ளர். 

சென்னையில் ஆலந்தூர், சென்ட்ரல், புறநகர் பேருந்து நிலைய மெட்ரோ ரயில் நிலையங்கள் பெயர் மாற்றம் செய்து முதல்வர் பழனிசாமி அறிவிப்பை வெளியிட்டுள்ளர். 

சென்னையில் கடந்த 2015ம் ஆண்டு முதல் மெட்ரோ ரயில் சேவை பயன்பாட்டில் உள்ளது. பல்வேறு இடங்களில் மெட்ரோ ரயில் சேவையால் மக்கள் பயனடைந்து வருகின்றனர். சில இடங்களில் மெட்ரோ ரயில் சேவைக்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், சென்னையில் உள்ள மூன்று முக்கிய மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு முன்னாள் முதல்வர்களின் பெயர்களைச் சூட்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அதில், சென்னையில் ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், சென்ட்ரல்  மெட்ரோ ரயில் நிலையம் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். சென்ட்ரல் மெட்ரோ என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புறநகர் பேருந்து நிலையம் மெட்ரோ புரட்சித்தலைவி டாக்டர் ஜெ.ஜெயலலிதா CMBT மெட்ரோ என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மெட்ரோ திட்டத்தை செயல்படுத்த ஜெயலலிதா எடுத்த நடவடிக்கையை நினைவுகூரும் வகையில் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

click me!