ஆர்.எஸ்.பாரதியின் ஜாமீனை ரத்து செய்ய கோரிய வழக்கு.. சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!

Published : Jun 23, 2020, 11:13 AM IST
ஆர்.எஸ்.பாரதியின் ஜாமீனை ரத்து செய்ய கோரிய வழக்கு.. சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!

சுருக்கம்

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் ஜாமீனை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பபட்டுள்ளது. 

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் ஜாமீனை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பபட்டுள்ளது. 

தாழ்த்தப்பட்ட மக்களையும் நீதிபதிகளையும் அவமதிக்கும் வகையில் பேசியதாக திமுக அமைப்பு செயலாளரும், மாநிலங்களவை எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி மே மாதம் 23ம் தேதி கைது செய்யப்பட்டார். அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவருக்கு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் முதலில் மே 31ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கியது. பின்னர் ஜூன் 1ம் தேதி வழக்கமான ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.  இந்த ஜாமீனை ரத்து செய்யக்கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அப்போது, வழக்கு விசாரணையில் ஆர்.எஸ்.பாரதி ஜாமீனை ரத்து செய்ய கோரிய மனுவை வாபஸ் பெற்றுவிட்டு, உயர்நீதிமன்றத்தை அணுக மனுதாரருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இந்நிலையில், ஜாமீனை ரத்து செய்யக்கோரி மத்திய குற்றப்பிரிவு போலீஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு  விசாரணைக்கு வந்த போது ஆர்.எஸ்.பாரதியின் ஜாமீனை  ரத்து செய்வதற்கு காவல்துறை காட்டும் அக்கறை தொடர்பாக நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மாநில அரசு கவனிக்க வேண்டிய ஏராளமான விஷயங்கள் உள்ள நிலையில், ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய காவல்துறை அதிக ஆர்வம் காட்டுவது ஏன்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதனையடுத்து, இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.

இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது. இதனையடுத்து, மத்திய குற்றப்பிரிவு தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

PREV
click me!

Recommended Stories

அமித் ஷா போட்ட ஸ்கெட்ச்..! கதறும் தலைவர்கள்..! தமிழக பாஜகவில் யாருக்கு சீட்..?
17 வயதிலேயே மலர்ந்த காதல்... பிரியங்கா காந்தி வீட்டில் டும்டும்..!