தமிழகம் முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு..? மாவட்ட ஆட்சியர்களுடன் நாளை முதல்வர் அவசர ஆலோசனை..!

By vinoth kumarFirst Published Jun 23, 2020, 10:36 AM IST
Highlights

சென்னையை தொடர்ந்து மற்ற மாவட்டங்களிலும் கொரோனா வேகமாக பரவி வருவதையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் நாளை காணொலி காட்சி மூலம் அவசர ஆலோசனை நடத்துகிறார். இதில், தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு எடுப்பது தொடர்பாக முக்கிய முடிவு எடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

சென்னையை தொடர்ந்து மற்ற மாவட்டங்களிலும் கொரோனா வேகமாக பரவி வருவதையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் நாளை காணொலி காட்சி மூலம் அவசர ஆலோசனை நடத்துகிறார். இதில், தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு எடுப்பது தொடர்பாக முக்கிய முடிவு எடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. கடந்த சி நாட்களாக பாதிப்பு 2 ஆயிரத்தை எட்டிய நிலையில் தற்போது 3 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.  ஒரு பக்கம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்தாலும் உயிரிழப்பும் அதிகரித்து வருவது பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், கொரோனா பரவலை தடுக்கும் விதமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் வருகிற 30ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அந்த வரிசையில் நேற்று மதுரை மாவட்டத்துக்கும் இன்று நள்ளிரவு முதல் வருகிற 30-ம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. மேலும், குறிப்பிட்ட சில மாவட்டங்களுக்கு மட்டும் ஊரடங்கு போடுவதால் ஓரளவு மட்டுமே பயன் தந்தாலும், தமிழகம் முழுவதும் கடுமையான ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டால் மட்டுமே அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், மருத்துவர்கள் கூறி வருகின்றனர். 

இந்நிலையில், நோய் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்துவது, முழு ஊரடங்கு உள்ளிட்டவை பற்றி நாளை காலை 10 மணிக்கு காணொலி மூலமாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவசர ஆலோசனை நடத்துகிறார். ஆலோசனை கூட்டத்தின் முடிவில் மாநிலம் முழுவதும் ஊரடங்கு குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

click me!