#BREAKING அப்பாவி தொழிலாளி அடித்து கொன்ற வழக்கு.. திமுக எம்.பி.க்கு ஜாமீன் வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம்.!

By vinoth kumarFirst Published Nov 19, 2021, 5:34 PM IST
Highlights

கடலூர் தொகுதி திமுக எம்.பி.யான டிஆர்விஎஸ் ரமேஷுக்கு சொந்தமான முந்திரி ஆலை பண்ருட்டி அடுத்த பணிக்கன்குப்பம் பகுதியில் உள்ளது. இங்கு வேலை செய்துவந்த மேல்மாம்பட்டை சேர்ந்த தொழிலாளி கோவிந்தராசு கொலை செய்யப்பட்ட வழக்கில் எம்.பி. ரமேஷ் கடந்த அக்டோபர் 11-ம் தேதி பண்ருட்டி நீதிமன்றத்தில் சரணடைந்தார். 

முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கில் திமுக எம்.பி. ரமேஷூக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. 

கடலூர் தொகுதி திமுக எம்.பி.யான டிஆர்விஎஸ் ரமேஷுக்கு சொந்தமான முந்திரி ஆலை பண்ருட்டி அடுத்த பணிக்கன்குப்பம் பகுதியில் உள்ளது. இங்கு வேலை செய்துவந்த மேல்மாம்பட்டை சேர்ந்த தொழிலாளி கோவிந்தராசு கொலை செய்யப்பட்ட வழக்கில் எம்.பி. ரமேஷ் கடந்த அக்டோபர் 11-ம் தேதி பண்ருட்டி நீதிமன்றத்தில் சரணடைந்தார். கடலூர் மத்திய சிறையில்அடைக்கப்பட்டுள்ள அவர் ஜாமீன் கோரி பண்ருட்டி நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த மனுவை தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பு விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமதுஜின்னா: திமுக எம்.பி. என்பதால் அவரை கடலூர் கிளைச் சிறையில் வைத்து சலுகை காட்டுவதாக, இறந்த கோவிந்தராசுவின் மகன் தரப்பு குற்றம்சாட்டுவது தவறானது. பாதுகாப்பு காரணங்களுக்காகவே அவர் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கண்காணிப்பு கேமரா பதிவுகள், தடயவியல் ஆய்வு அறிக்கைக்காக காத்திருக்கிறோம். எந்த தலையீடும் இல்லாமல் விசாரணை நடந்து வருகிறது. தமிழக அரசே முன்வந்து இந்தவழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றியுள்ளது. புலன் விசாரணை நியாயமான முறையில் நேர்மையாக நடந்து வருகிறது.

கோவிந்தராசு மகன் செந்தில்வேல் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.பாலு: விசாரணை அதிகாரிஇந்த வழக்கை நியாயமான முறையில் விசாரிக்கவில்லை. பூனைக்கும் காவல், பாலுக்கும் காவல்என்கிற ரீதியில் விசாரணை நடப்பதால், விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும். விசாரணை அதிகாரியையும் மாற்ற வேண்டும் என்றார். அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதி திமுக எம்.பி. ரமேஷூக்கு ஜாமீன் வழங்குவதாக உத்தரவிட்டுள்ளார். இந்த விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்ற செந்தில்வேலின் கோரிக்கை மீது நவம்பர் 23ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

click me!