
தமிழகத்தில் சீமைக் கருவேல மரங்களை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
நிலத்தடி நீரை உரிஞ்சும் சீமைக்கருவேல மரங்களை வெட்டி அகற்ற உத்தரவிடுமாறு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து சீமைக்கருவேல மரங்களை அப்புறப்படுத்த அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவிடப்பட்டது.
இதன்பேரில் தமிழகம் முழுவதும் உள்ள சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி நடைபெற்று வந்தது. இதற்கிடையே சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்படுவது குறித்து நிபுணர் குழுவை அமைக்க வேண்டும் என்றும், அதுவரை கருவேல மரம் அகற்ற தடை விதிக்க வேண்டும் என்றும் மேகநாதன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இவ்வழக்கு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது சீமைக் கருவேல மர வழக்கை 3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றுவதாக தெரிவித்த நீதிமன்றம் அதுவரை மரத்தை வெட்ட தடைவிதித்து உத்தரவிட்டது.