சென்னையில் கண்ணாமூச்சி ஆடும் கொரோனா... விடாமல் விரட்டும் சிறப்பு அதிகாரி , உச்சத்தை தொட்ட ராயபுரம்..!!

By Ezhilarasan BabuFirst Published May 11, 2020, 1:56 PM IST
Highlights

இந்நிலையில் மே 11 ஆம் தேதி காலை 8 மணி நிலவரப்படி ,  ராயபுரத்தில் 676 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது ,  அதற்கு அடுத்து கோடம்பாக்கத்தில் 630 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது , 

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால்  கருஞ்சிவப்பு மண்டலங்களில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது .  தமிழக அரசு வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவரும் போதிலும் தொடர்ந்து கொரோனா தொற்று எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருவதால் சென்னை மாநகராட்சி  சிவப்பு மண்டலமாகவே தொடர்கிறது . ஆரம்பத்திலிருந்தே இராயபுரம் மண்டலம் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வந்த நிலையில் பின்னர் திருவிக நகர் மண்டலம் முதல் இடத்திற்கு சென்றது ,  பிறகு கோடம்பாக்கம் மண்டலம் முதலிடம் பிடித்தது .  இதனால் கோடம்பாக்கம் கருஞ்சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டது . இந்நிலையில் நேற்று எழும்பூரில் பிறந்து ஒரே நாளான குழந்தை உட்பட சென்னையில் ஏழு குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது 

இந்நிலையில் மே 11 ஆம் தேதி காலை 8 மணி நிலவரப்படி ,  ராயபுரத்தில் 676 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது ,  அதற்கு அடுத்து கோடம்பாக்கத்தில் 630 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது ,  திருவிக நகரில் சுமார்  556 பேருக்கும் ,   தேனாம்பேட்டையில் 412 பேருக்கும் ,  வளசரவாக்கத்தில் 319 பேருக்கும் அண்ணாநகரில்   301 பேருக்கும் தண்டையார்பேட்டையில் 274 பேருக்கும் ,  அம்பத்தூரில் 205 பேருக்கும் ,  அடையாறில் 175 பேருக்கும் ,  திருவெற்றியூரில் 84 பேருக்கும் மாதவரத்தில் 54 பேருக்கும் மணலியில் 42 பேருக்கும் பெருங்குடியில் 36 பேருக்கும் ஆலந்தூரில் 29 பேருக்கும் சோழிங்கநல்லூரில் 28 பேருக்கும் இதர பகுதியில் 18 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது .  இதில் சென்னையில் மட்டும் 3839 பேருக்கு இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.  அதேபோல் மே 11ஆம் தேதி காலை 8 மணி நிலவரப்படி சென்னையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது. 

மொத்தம் 3 ஆயிரத்து 50 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் ,  இதுவரை சுமார் 743 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  அதிக அளவில் ராயபுரத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர் . தற்போதுவரை கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கையில் ராயபுரம் மண்டலவே முதலிடத்தில் உள்ளது .  ராயபுரத்தில் மட்டும் சுமார் 676 பேருக்கு நோய் பாதித்து இருப்பது குறிப்பிடத்தக்கது . இந்நிலையில்  ராயபுரம் திருவிக நகர் கோடம்பாக்கம் உள்ளிட்ட மூன்று மண்டலங்களும் மாறிமாறி கொரோனா பட்டியலில் முதலிடம் பிடித்து வருகிறது .  இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ளார் தமிழக கொரோனா வைரஸ் நோய் தடுப்பு சிறப்பு அதிகாரி டாக்டர் ராதாகிருஷ்ணன், நோய்த்தொற்று இங்கிருந்துதான் வருகிறது என்று உறுதியாகச் சொல்ல முடியாது ,  எங்கிருந்து வேண்டுமானாலும் வரலாம், ஆனால் சோதனைகளை அதிகப்படுத்தி பரவலை குறைப்பதே தம் நோக்கம்  என குறிப்பிட்டுள்ளார் .

 

இந்நிலையில் பெரும்பாலானோருக்கு அறிகுறிகள் இன்றியே தொற்று ஏற்பட்டு வருகிறது .அடுத்த ஒரு வார காலத்திற்குள் தோற்று எண்ணிக்கையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும் எனவும் எந்த அறிகுறியும் இல்லாதவர்களுக்கு மத்திய மாநில அரசின் அறிவுரைப்படி மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

click me!