பண மோசடி வழக்கு.. திமுக முக்கிய பிரமுகரின் மருமகன் அதிரடி கைது..!

By vinoth kumarFirst Published Oct 20, 2021, 3:25 PM IST
Highlights

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த பெண் தொழிலதிபர் சிந்துஜா. சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், முன்னாள் எம்.எல்.ஏ கோவை தங்கம் மருமகன் அருண் பிரகாஷ், தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி 7 கோடி ரூபாய் வரை பணம் பெற்று மோசடி செய்ததாகவும், பணத்தை திருப்பி கேட்டபோது, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறியிருந்தார்.

பண மோசடி வழக்கில் முன்னாள் எம்.எல்.ஏ கோவை தங்கம் மருமகன் அருண் பிரகாஷை போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த பெண் தொழிலதிபர் சிந்துஜா. சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், முன்னாள் எம்.எல்.ஏ கோவை தங்கம் மருமகன் அருண் பிரகாஷ், தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி 7 கோடி ரூபாய் வரை பணம் பெற்று மோசடி செய்ததாகவும், பணத்தை திருப்பி கேட்டபோது, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறியிருந்தார்.

இதனையடுத்து, அருண்பிரகாஷ் மீது மோசடி சட்டப்பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனிடையே, அருண் பிரகாஷ் மீது சிந்துஜாவின் தந்தை செங்குட்டுவன் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில், அருண்பிரகாஷ் தன்னிடம் ரூ.1½ கோடி வாங்கியிருந்தார். அந்த பணத்தை திருப்பிக் கேட்டபோது வால்பாறையில் தேயிலை எஸ்டேட்டை விற்று பணத்தை தருவதாக கூறினார். மேலும் 2 காசோலைகளை கொடுத்தார். ஆனால் அந்த காசோலைகள் வங்கியில் பணம் இல்லாமல் திரும்பி வந்து விட்டது. எனவே பணத்தை தராமல் ஏமாற்றிய அருண்பிரகாஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தார்.

இதையடுத்து, அருண் பிரகாஷ் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையை தொடர்ந்து அருண் பிரகாஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாகதான் தமாகாவில் இருந்து விலகி கோவை தங்கம் மற்றும் அவரது மருமகன் திமுகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

click me!