திமுக முக்கிய கூட்டணி கட்சி தலைவர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு.. சிறப்பு நீதிமன்றம் அதிரடி நடவடிக்கை.

By Ezhilarasan BabuFirst Published Sep 22, 2021, 12:12 PM IST
Highlights

அவர்கள் மீதான வழக்கில் சிறப்பு நீதிமன்றம் இன்று குற்றச்சாட்டுகளை பதிவு செய்தது. திமுகவின் முக்கிய கூட்டணி கட்சித் தலைவர்களான வைகோ, திருமாவளவன் ஆகியோர்  கூட்டாக நீதிமன்றத்தில் ஆஜரானதால் அங்கு ஏராளமான கட்சி தொண்டர்கள் திரண்டனர், இதனால் அந்த வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கடந்த 2016-ம் ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்ட 3 பேர் மீது இன்று சென்னை எம்பி, எம்எல்ஏக்கள் மீதான சிறப்பு நீதிமன்றம் குற்றச்சாட்டு பதிவு  செய்தது. அதில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் மற்றும் வைகோ ஆகியோர் நேரில் ஆஜரானதால் சிறப்பு நீதிமன்ற வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.

கடந்த 2016ஆம் ஆண்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சென்னை எழும்பூர் ரயில் நிலைய முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. அப்போராட்டம் அனுமதியின்றி நடத்தப்பட்டது எனக்கூறி அப்போதய அரசு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் தொல்.திருமாவளவன் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்தது. இந்நிலையில் அது தொடர்பான வழக்கு விசாரணைகள் எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அதற்கான வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், வைகோ மற்றும் தொல். திருமாவளவன் ஆகியோர் நேரில் ஆஜராகினர். 

அவர்கள் மீதான வழக்கில் சிறப்பு நீதிமன்றம் இன்று குற்றச்சாட்டுகளை பதிவு செய்தது. திமுகவின் முக்கிய கூட்டணி கட்சித் தலைவர்களான வைகோ, திருமாவளவன் ஆகியோர்  கூட்டாக நீதிமன்றத்தில் ஆஜரானதால் அங்கு ஏராளமான கட்சி தொண்டர்கள் திரண்டனர், இதனால் அந்த வளாகம் பரபரப்பாக காணப்பட்டது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், கடந்த 2016-ம் ஆண்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நடத்தப்பட்ட போராட்டத்தில், அப்போதைய அரசு தொடர்ந்த வழக்கில் இன்று நீதிமன்றத்தில் ஆஜரானதாகக் கூறினார். அப்போதைய அரசு வேண்டுமென்றே தங்கள் மீது பொய் வழக்கு  தொடர்ந்ததாக அவர் கூறினார்.

மேலும், நீட் விவகாரத்தில் ஏ.கே ராஜன் குழு விரிவான அறிக்கையை வழங்கியுள்ளது, அதன்படி பெரும்பான்மை ஆதரவுடன் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. ஆதாரப் பூர்வமாக, அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்து நீட் தேர்வு குறித்து அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. இது நிச்சயம் நீட்தேர்வு விளக்குக்கு வலுசேர்க்கும் ஆதாரமாக இருக்கும், நிச்சயம் குடியரசுத் தலைவர் இந்த சட்டத்துக்கு ஒப்புதல் அளிப்பார் என நம்புகிறேன் என அவர் கூறினார்.
 

click me!