முதல்வர் நலமடைய சந்திரபாபு நாயுடு வாழ்த்து - ஆந்திரா சார்பில் பூஜை செய்து பிரசாதம் அனுப்ப முடிவு

Asianet News Tamil  
Published : Oct 12, 2016, 08:17 AM ISTUpdated : Sep 19, 2018, 02:53 AM IST
முதல்வர் நலமடைய சந்திரபாபு நாயுடு வாழ்த்து - ஆந்திரா சார்பில் பூஜை செய்து பிரசாதம் அனுப்ப முடிவு

சுருக்கம்

முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 19 நாட்கள் ஆகும் நிலையில் அவரது உடல் நலம் குறித்து நாடெங்கும் உள்ள தலைவர்கள் , ஆட்சி பொறுப்பில் உள்ளவர்கள் நேரில் வந்து விசாரித்து செல்கின்றனர்.

நேரில் வர இயலாதவர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசியல் கட்சித்தலைவர்கள் பிரபலங்கள் முதல்வரை காண வந்து செல்கின்றனர்.

நாளை பாஜக தேசிய தலைவர் அமித்ஷா மற்றும் அருண் ஜேட்லி வர உள்ளனர். இந்நிலையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைய வாழ்த்து தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார். 

ஆந்திர அரசின் சார்ப்பாகவும் , தனது சார்பாகவும்  திருப்பதி கோவிலில் விஷேஷ பூஜை செய்து பிரசாதத்தை அனுப்பி வைக்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். விரைவில் திருப்பதி கோவில் பிரசாதம் அப்போல்லோவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

PREV
click me!

Recommended Stories

Vijay vs Stalin: இடைத்தேர்தலை புறக்கணிக்கும் திமுக.! முன் வைத்த காலை பின் வைக்கிறதா?! மீண்டும் மேலே பறக்கும் விசில் கொடி.!
TN Assembly byelection Candidate: இடைத்தேர்தல் யுத்தம்.! விசில் சின்னத்தில் போட்டியிடும் அதிமுக முகங்கள்.! செக் மேட் யாருக்கு?