
மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி பிரதமர் மோடி தமிழகத்துக்குள் வந்து சென்றுவிட்டார், ஆனால் ஆந்திராவுக்கு அவர் வந்தால் மிகப்பெரிய போராட்டத்தை சந்திக்கவேண்டி வரும் என ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு எச்சரித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழக மக்களும், ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்திஸ்து வழங்க வேண்டும் என்று அம்மாநில மக்களும் மத்திய அரசை எதிர்த்து கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் தமிழக மற்றும் ஆந்திர மாநில எம்.பி. க்கள் முடக்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனாலும் மத்தியில் ஆளும் பாஜக அரசு இந்த இரண்டு கோரிக்கைகள் குறித்து வாய் திறக்காமல் மௌனமாகவே இருந்து வருகிறது.
இந்நிலையில் சென்னை அருகே நடைபெற்று வரும் ராணுவ தளவாடங்கள் கண்காட்சியைப் பார்வையிட பிரதமர் மோடி நேற்று தமிழகம் வந்தார். அவரது வருகைக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.
திமுக, காங்கிரஸ், இடது சாரிகள், விடுதலைச் சிறுத்தைகள், நாம் தமிழர், தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட அமைப்புகளும், திரையுலகத்தினரும் மோடியின் தமிழக வருகையை கடுமையாக எதிர்த்தனர்.
இதையொட்டி நேற்று தமிழகம் முழுவதும் கருப்புக் கொடி போராட்டம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்துக்கு அஞ்சி பிரதமர் சாலை வழிப்போக்குவரத்தை தவிர்த்தார். விமானம் மற்றும் ஹெலிபாப்டரில் மட்டுமே பயணம் செய்தார்.
மேலும் Go Back Modi என்ற சொல் முகநூல் மற்றும் டுவிட்டரில் உலக அளவில் ட்ரெண்ட் ஆகி முதலிடத்தைப் பிடித்தது. உலகம் முழுவதும் பிரதமர் மோடியின் பெயர் இதன் மூலம் டேமேஜ் ஆனது. இது பிரதமர் மோடிக்கும், பாஜக அரசுக்கும் பெரும் பின்னடைவாகவே கருதப்படுகிறது.
இந்நிலையில் பிரதமர் மோடி மீது ஆந்திர மக்களும் செம கடுப்பில் உள்ளனர். தேர்லின்போது அளித்த வாக்குறுதியில் ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என அறிவிக்கப்ப்ட்டிருந்தது. ஆனால் இதற்கும் மத்திய பாஜக அரசு செவி சாய்க்காதததால் மத்திய அரசில் இருந்து வெளியேறிய அம்மாநில முதலமைச்சர் கூட்டணியில் இருந்தும் விலகினார்.
இந்நிலையில் தமிழ்நாடு போல் இல்லை ஆந்திர மாநிலம், அங்கு ஈஸியாக வந்து போய்விட்டார் மோடி, ஆனால் ஆந்திர மாநிலத்துக்குள் அவர் கால் வைத்தால் மிகப் பெரிய போராட்டத்தை சந்திக்க வேண்டி வரும் என முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு எச்சரிக்கை விடுத்துள்ளார்.