ராஜினாமா செய்தார் சந்திரபாபு நாயுடு !! பறிபோனது முதலமைச்சர் பதவி !!

By Selvanayagam PFirst Published May 23, 2019, 9:17 PM IST
Highlights

ஆந்திர மாநில சட்டசபை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி மிகப்பெரிய  தோல்வியைச் சந்தித்த நிலையில் முதலலமைச்சர்  சந்திரபாபு நாயுடு தனது ராஜினாமா கடிதத்தை கவர்னரிடம் அளித்தார்.ஆந்திர மாநிலத்துக்கு மக்களவையுடன், சட்டமன்றத்துக்கும்  சேர்த்து தேர்தல் நடைபெற்றது.
 

ஆந்திர மாநில சட்டசபை தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.ஆர்.எஸ். காங்கிரஸ் வேட்பாளர்கள் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். அம்மாநிலத்தை ஆளும் தெலுங்கு தேசம் கட்சி மிகப்பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது.

இந்நிலையில், இன்றிரவு கவர்னர் நரசிம்மனை சந்தித்த முதலமைச்சர்  சந்திரபாபு நாயுடு தனது ராஜினாமா கடிதத்தை அவரிடம் ஒப்படைத்தார்.

பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களித்த பொதுமக்களுக்கும் தேர்தலின்போது கடுமையாக உழைத்த கட்சி தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

ஆந்திராவின் முதல்மைச்சராக  பதவியேற்கும் ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் ஒடிசா முதல் மந்திரியாக மீண்டும் பதவியேற்கவுள்ள நவீன் பட்நாயக் ஆகியோருக்கு அவர் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.

click me!