இப்படிப்பட்ட பெருமை அடையும் 3 ஆவது பிரதமர் மோடியே..!

By ezhil mozhiFirst Published May 23, 2019, 9:05 PM IST
Highlights

இந்திரா காந்தி, நேரு வெற்றி பிறகு லோக்சபா தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெற்று அதுவும் இரண்டாவது முறையாக ஆட்சி ஏற்கும் மூன்றாவது பிரதமர் யார் என்றால் அது அவர் நரேந்திர மோடி தான்.

இப்படிப்பட்ட பெருமை அடையும் 3 ஆவது பிரதமர் மோடியே..! 

இந்திரா காந்தி, நேரு வெற்றி பிறகு லோக்சபா தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெற்று அதுவும் இரண்டாவது முறையாக ஆட்சி ஏற்கும் மூன்றாவது பிரதமர் யார் என்றால் அது அவர் நரேந்திர மோடி தான்.

2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை பெற்று பாஜக ஆட்சியைப் பிடித்தது. பிரதமர் நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றார். இதற்கு முன்னதாக 1951 மற்றும்1952 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் லோக்சபா தேர்தலில் நான்கில் மூன்று பங்கு பிடித்து நேரு வெற்றி பெற்றார்.

அதேபோன்று 1957 ,1962 ஆகிய இரண்டு ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தலிலும் அதிக பெரும்பான்மை பெற்று நேரு வெற்றி பெற்றார். அதாவது நாடு முழுவதும் மொழிவாரியாக பல்வேறு மாறுபாடுகள் இருந்தாலும் காங்கிரஸ் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.

அதன் பின்னர் 1967 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நேருவின் மகள் இந்திரா 520 இடங்களில் 283 இடங்களை பிடித்து வெற்றி பெற்றார். அதேபோன்று 1971இல் நடந்த தேர்தலிலும் இந்திரா காந்தி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றார். 

அதன் பின்னர் தற்போதுதான் தொடர்ந்து இரண்டாவது முறையாக அதிக பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும் மூன்றாவது பிரதமர் என்ற பெருமையை தட்டிச் சென்றுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி என்பது குறிப்பிடத்தக்கது.

click me!