சந்திரபாபு நாயுடு குடியிருக்கும் பங்களாவையும் இடிக்க உத்தரவு !! ஓட ஓட விரட்டும் ஜெகன் மோகன் …

By Selvanayagam PFirst Published Jun 28, 2019, 8:52 PM IST
Highlights

சுற்றுச்சூழல் விதிகளை மீறி கட்டப்பட்டதால், சந்திரபாபு நாயுடு குடியிருக்கும் பங்களாவை இடிக்க ஜெகம் மோகன் அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து   7 நாட்களுக்குள் பங்களாவை காலி செய்யும்படி அவருக்கு ஆந்திர அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கிருஷ்ணா நதிக்கரையில் இருந்து 100 மீட்டர் தூரத்திற்குள்  எந்தவித  கட்டுமானமும் கட்டக் கூடாது என ஆந்திர அரசின் சட்டத்தில் வரையறை செய்யப்பட்டுள்ளது. ஆனால்  இந்த விதிகளை மீறி கட்டப்பட்ட, சந்திரபாபு பங்களா உள்ளிட்ட, 28 கட்டடங்கள் இடிக்க உள்ளதாகவும், அங்கு குடியிருப்பவர்கள் உடனடியாக வெளியேறும்படியும் ஆந்திர அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஆந்திர மாநிலம் அமராவதி அருகே கிருஷ்ணா நதிக்கரையோரம், அதிகாரிகள் மற்றும் பொது மக்களை சந்திப்பதற்கு வசதியாக 8 கோடி  ரூபாய் செலவில், பிரஜா வேதிகா என்ற பெயரில் மாளிகை ஒன்றை முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கட்டினார். 

இதன் அருகே, சந்திரபாபு  நாயுடு குடியிருக்க மாளிகை ஒன்றும் கட்டப்பட்டது. இந்த மாளிகை, பிரஜா வேதிகா ஆகியவை விதிகளை மீறி கட்டப்பட்டதாக ஆந்திரா முதலமைச்சர்  ஜெகன்மோகன் குற்றம்சாட்டினார். இதைத் தொடர்ந்து அதனை இடிக்க ஜெகன் உத்தரவிட்டார். இதன்படி சில நாட்களுக்கு முன்னர், பிரஜா வேதிகா முழுமையாக இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.. 

அதே நேரத்தில் எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் தான் குடியிருக்கும் பங்களாவில் தொடர்ந்து வசிக்க அனுமதிக்க வேண்டும் என சந்திரபாபு கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்க ஜெகன் மறுத்துவிட்டார்.

இதனை தொடர்ந்து, பங்களாவில் இருந்து வெளியேறும்படி, அந்த பங்களாவில் அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். கிருஷ்ணா நதிக்கரையில் இருந்து 100 மீட்டர் தூரத்திற்கு எந்த கட்டுமானம் கூடாது. இந்த விதிகளை மீறி கட்டப்பட்ட, சந்திரபாபு பங்களா உள்ளிட்ட, 28 கட்டடங்கள் இடிக்க உள்ளதாகவும், அங்கு குடியிருப்பவர்கள் உடனடியாக வெளியேறும்படியும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இதையடுத்து  சந்திரபாபு நாயுடு தனது குடும்பத்தினருடன் அங்கிருந்து குடிபெயற உள்ளார். இதற்காக விஜயவாடா அல்லது குண்டூரில் வாடகை வீடு தேடும் பணியில் தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

click me!