விரைவில் பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி..!! மோடியுடன் அலோசிப்பதாக மத்திய அமைச்சர் உறுதி..!!

By Ezhilarasan BabuFirst Published May 6, 2020, 6:51 PM IST
Highlights

அதாவது  பஸ் மற்றும் கார் ஓட்டுனர்கள் கூட்டமைப்பினருடன் வீடியோ கான்பரன்சிங்கில்  உரையாடிய அவர்,  வாழ்வாதாரம் இன்றி அத்தொழிலாளர்கள்  சந்தித்து வரும் நெருக்கடிகள் குறித்து கேட்டறிந்தார் ,

கொரோனா வைரஸ் பாதிப்பில்லாத  பசுமை மண்டலங்களில் அரசாங்கம் ஏற்கனவே பல கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ள நிலையில் விரைவில் சில வழிகாட்டு நெறிமுறைகளுடன் பொதுப் போக்குவரத்து அனுமதிக்கப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார் , கொரோனா வைரஸ் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது இதுவரை 49 ஆயிரத்து 436 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது, இதுவரை 1,695 பேர் உயிரிழந்துள்ளனர் .  சுமார் 14,183 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர் .  ஆனாலும்  33 ஆயிரத்து 558 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் இந்நிலையில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன ,   குறிப்பாக கடந்த மார்ச் 25ஆம் தேதி அறிவிக்கப்பட்ட  நாடு தழுவிய  ஊரடங்கு  சுமார் 40 நாட்களையும் கடந்த நிலையில் ,  கொரோனா வைரஸ் கட்டுக்குள் வராததால் மே 17 வரை மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில்  பொதுமக்களின் இழல்பு வாழ்க்கை இதுவரை இல்லாத அளவுக்கு  முற்றிலுமாக முடங்கிப்போயுள்ளது.  அதுமட்டுமின்றி கோடிக்கணக்கான அமைப்புசாரா தொழிலாளர்கள் கூலித்தொழிலாளர்கள் கட்டிட தொழிலாளர்கள் விளிம்புநிலை மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து வறுமையில் தவித்து வருகின்றனர் பொதுப் போக்குவரத்து முற்றிலுமாக  நிறுத்தப்பட்டுள்ளதால் , மாநிலம் விட்டு மாநிலங்களுக்கு  இடம் பெயர்ந்த லட்சக்கணக்கான  கூலித் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல்  ஆங்காங்கே சிக்கி சின்னாபின்னமாகி வருகின்றனர் ,  இந்நிலையில் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்புவதற்காவது  ரயில் உள்ளிட்ட பொது போக்குவரத்துக்களை இயக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்தன,  கொரோனாவுக்கு  அஞ்சி இன்னும் எத்தனை மாதங்கள் இப்படியே வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பது  இந்த வைரசை எதிர்த்துக் கொண்டே ஒரு புதியவகை இயல்பு வாழ்க்கைக்கு நாடு தயாராக வேண்டும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அழைப்பு விடுத்துள்ளார். 

இந்நிலையில்  இது குறித்து  தெரிவித்துள்ள மத்திய நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர்  நிதின் கட்கரி விரைவில் சில வழிகாட்டு நெறிமுறைகளுடன் பொதுப் போக்குவரத்து தொடங்கப்படும் என கூறியுள்ளார் ,  அதாவது  பஸ் மற்றும் கார் ஓட்டுனர்கள் கூட்டமைப்பினருடன் வீடியோ கான்பரன்சிங்கில்  உரையாடிய அவர்,  வாழ்வாதாரம் இன்றி அத்தொழிலாளர்கள்  சந்தித்து வரும் நெருக்கடிகள் குறித்து கேட்டறிந்தார் ,  அப்போது விரைவில் சில வழிகாட்டுநெறிமுறைகளுடன் கார் ,  பேருந்துகள் உள்ளிட்ட  பொதுப் போக்குவரத்தை அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார் , அப்படி  கார் பேருந்து உள்ளிட்ட போக்குவரத்தை  அனுமதிக்கும்போது போதிய சமூக இடைவெளிகளுடன்  முறையான சுத்திகரிப்பு முறையான கைக்கழுவுதல் முகக்கவசம் அணிதல்  போன்ற பாதுகாப்பு அம்சங்கள் தீவிரமாக கடைபிடிக்க வேண்டும் என அவர்களிடம் எச்சரிக்கை விடுத்தார் .  ஆனால் எப்போதிலிருந்து போக்குவரத்து அனுமதிக்கப் படும் என்பதை அவர் தெரிவிக்கவில்லை.  இது குறித்து விரைவில்  பிரதமர் மோடியிடம் கலந்தாலோசித்து  முடிவு அறிவிக்கப்படும் என அவர் கூறியுள்ளார். 
 

click me!