கொட்டும் மழையில் வீதிவீதியாக நடந்த நிர்மலா சீதாராமன்...!! மிரண்டுபோன பாஜக தொண்டர்கள்..!! என்ன நடந்தது தெரியுமா..??

By Ezhilarasan BabuFirst Published Oct 31, 2019, 2:52 PM IST
Highlights

பாத யாத்திரை டி.பி.சத்திரம் பரமேஸ்வர் நகரில் சுமார் 3½ கி.மீ தூரத்தை கடந்து நிறைவு பெற்றது. அங்கு மேடை அமைக்கப்பட்டு காந்தி, படேல் படங்கள் வைக்கப்பட்டிருந்தன. அவற்றுக்கு பா.ஜனதா கட்சியினர் மலர் தூவினர். பாத யாத்திரையாக வந்தபோது பல இடங்களில் மழை தண்ணீர் தேங்கி நின்றது. லேசாக மழையும் பெய்தது. அதனை பொருட்படுத்தாமல் மத்திய நிதி அமைச்சர் திருமதி. நிர்மலாசீதாராமன் 3½ கி.மீ தூரமும் நடந்து சென்றார்.

மகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு பிறந்தநாள் பாத யாத்திரை நிறைவு விழா, சர்தார் வல்லபாய் படேலின் 144-வது ஆண்டு பிறந்தநாள் ஒற்றுமை நடைபயண விழா, தமிழர்களின் பண்பாட்டை உலகுக்கு பறைசாற்றிய பிரதமர் நரேந்திரமோடிக்கு நன்றி தெரிவிக்கும் விழா ஆகிய முப்பெரும் விழா பாத யாத்திரை சென்னையில் இன்று நடந்தது.செனாய்நகர் புல்லா அவென்யூவில் இருந்து தொடங்கிய இந்த பாத யாத்திரைக்கு மத்திய மந்திரி  திருமதி.நிர்மலா சீதாராமன் தலைமை தாங்கி நடத்தி சென்றார். 

பூந்தமல்லி நெடுஞ்சாலை, லட்சுமி டாக்கீஸ் சாலை, கஜபதி ரோடு வழியாக  மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் , பாஐக மாநில பொது செயலாளர் வானதி சீனிவாசன், நடிகை கவுதமி ஆகியோர் நடந்து சென்றனர். இந்த பாத யாத்திரையின்போது செனாய் நகர் 4-வது குறுக்கு தெருவில் பா.ஜனதா கொடியேற்றப்பட்டது. ஊர்வலமாக சென்றவர்கள் மத்திய அரசின் நலத்திட்டங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச்சென்றனர். கஜபதி தெருவில் படேல் படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டது. அப்போது பா.ஜனதா மகளிர் அணியினர் நிர்மலா சீதாராமனுக்கு பூரண கும்ப மரியாதை அளித்தனர். 

பாஜக பாதயாத்திரை செனாய் நகரில் தொடங்கிய பாத யாத்திரை டி.பி.சத்திரம் பரமேஸ்வர் நகரில் சுமார் 3½ கி.மீ தூரத்தை கடந்து நிறைவு பெற்றது. அங்கு மேடை அமைக்கப்பட்டு காந்தி, படேல் படங்கள் வைக்கப்பட்டிருந்தன. அவற்றுக்கு பா.ஜனதா கட்சியினர் மலர் தூவினர். பாத யாத்திரையாக வந்தபோது பல இடங்களில் மழை தண்ணீர் தேங்கி நின்றது. லேசாக மழையும் பெய்தது. அதனை பொருட்படுத்தாமல் மத்திய நிதி அமைச்சர் திருமதி. நிர்மலாசீதாராமன் 3½ கி.மீ தூரமும் நடந்து சென்றார்.அதில் பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்துகொண்டனர். 

click me!