செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை நடத்தப் போவது மத்திய அரசா? மாநில அரசா? டி.ஆர்.பாலு பரபரப்பு தகவல்..!

By vinoth kumarFirst Published May 27, 2021, 7:11 PM IST
Highlights

செங்கல்பட்டில் தடுப்பூசி தயாரிப்பு தொடங்கப்பட்டால் முதல் 6 மாதத்தில் 2 கோடி தடுப்பூசியும், அடுத்த ஓராண்டில் 8 கோடி தடுப்பூசியும் தயாரிக்க முடியும் என்றனர். 

செங்கல்பட்டு கொரோனா தடுப்பூசி மையம் தொடர்பாக ஒரு வாரத்தில் மத்திய அரசு பதில் அளிப்பதாக கூறியுள்ளது என டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தடுப்பூசி மையத்தைச் செயல்பாட்டுக்கு கொண்டுவருவது தொடர்பாக டெல்லியில் மத்திய ரயில்வேதுறை அமைச்சர் பியூஸ் கோயலை தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் திமுகவின் பொருளாளரும், கட்சியின் மக்களவைக் குழு தலைவருமான டி.ஆர்.பாலு ஆகியோர் சந்தித்தனர். 

பின்னர் அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் டி.ஆர்.பாலு ஆகியோர் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனத்தை தமிழக அரசே ஏற்று நடத்துவது தொடர்பாக தமிழக முதல்வர் உத்தரவின் பேரில், அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து ஆலோசனை நடத்தினோம்.தற்போது கொரோனா பரவல் தீவிரமாக உள்ளதால் தடுப்பூசி அதிகளவில் தயாரிக்க வேண்டும் என்பதே முதல்வர் மு.க.ஸ்டாலினின் கோரிக்கை. அதையும் மத்திய அமைச்சரிடம் விரிவாக எடுத்துரைத்தோம்.

செங்கல்பட்டு கொரோனா தடுப்பூசி மையம் தொடர்பாக ஒரு வாரத்தில் பதில் அளிப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது. செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தில் விரைவில் தடுப்பூசி உற்பத்தி செய்யப்படும். தடுப்பூசி மையத்தை நடத்த போவது மத்திய அரசா? மாநில அரசா? என்பது ஒரு வாரத்தில் தெரியும். தடுப்பூசித் தயாரிக்கும் பணியை வேகப்படுத்த வேண்டும் என்பதே தமிழக அரசின் நோக்கம். செங்கல்பட்டில் தடுப்பூசி தயாரிப்பு தொடங்கப்பட்டால் முதல் 6 மாதத்தில் 2 கோடி தடுப்பூசியும், அடுத்த ஓராண்டில் 8 கோடி தடுப்பூசியும் தயாரிக்க முடியும் என்றனர். 

click me!