கொரோனாவுக்கு எதிராக மத்திய அரசின் உதவிகள், உண்மை நிலை.. ஆதாரத்துடன் வெளியிட்ட எல். முருகன்.

By Ezhilarasan BabuFirst Published May 22, 2021, 5:59 PM IST
Highlights

நாடு முழுவதும் 196 ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ்கள் இதுவரை பல்வேறு மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டது. ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் கடந்த சில நாட்களாக ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 800 மெட்ரிக் LMO ஆக்சிஜனை தேசத்திற்கு வழங்கி வருகிறது.

தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக பாஜக மாநிலத்தலைவர் எல். முருகன் புள்ளி விவரத்துடன் அறிக்கையாக வெளியிட்டுள்ளார். அதன் விவரம் பின் வருமாறு:

மே 18 வரை தமிழகத்திற்கு அளிக்கப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை : 86,55,010. மே 18 வரை தமிழகத்தில் கையிருப்பில் இருந்த தடுப்பூசிகளின் எண்ணிக்கை : 13,63,494 மே 20 வரை மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ள தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை : 70,82,380. மே 19 வரை 18 முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள தடுப்பூசிகள் எண்ணிக்கை : 41,319 

2021. மே 15 அன்று, தமிழகத்திற்கான தடுப்பூசி ஒதுக்கீட்டை மத்திய அரசு அதிகரித்தது. அதன் படி, 7,68,530 கோவிஷீல்ட் மற்றும் 2,66,530 கோவாக்சின் தடுப்பூசிகளை தமிழகத்திற்கு ஒதுக்கியது மத்திய அரசு.தமிழகத்திற்கு அளித்து வந்த ரெம்டேசீவிர் ஒதுக்கீட்டை மே 17 அன்று மத்திய அரசு அதிகரித்தது. தற்போது கிடைக்கும் 7000 டோஸ்களுக்கு பதிலாக ஒரு நாளைக்கு 20,000 டோஸ்களை தமிழகம் பெறும்.

ஏப்ரல் 21 முதல் மே 23 வரை தமிழகத்திற்கு அளிக்கப்பட்ட ரெம்டேசீவிர்களின் எண்ணிக்கை 35,00,000. Oxygen Express இந்திய ரயில்வே 727 க்கும் மேற்பட்ட டேங்கர்களில் கிட்டத்தட்ட 11,800 மெட்ரிக் டன் LMO ஆக்சிஜனை பல்வேறு மாநிலங்களுக்கு வழங்கியுள்ளது. நாடு முழுவதும் 196 ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ்கள் இதுவரை பல்வேறு மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டது. ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் கடந்த சில நாட்களாக ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 800 மெட்ரிக் LMO ஆக்சிஜனை தேசத்திற்கு வழங்கி வருகிறது. மே 22 வரை ஆக்ஸிஜன் ரயிலில் மட்டும் தமிழகத்திற்கு 649.4 MT மருத்துவ ஆக்ஸிஜன் கொண்டுவரப்பட்டுள்ளது. அதுபோக, தமிழகத்திற்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டை மத்திய அரசு 519 மெட்ரிக் டன்னாக உயர்த்தியுள்ளது. ஈ – சஞ்ஜீவனி தேசிய தொலை மருத்துவ சேவை 

 

மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின், தேசிய தொலை மருத்துவ சேவை மூலம் இந்தியாவில் 50 லட்சத்திற்கும் அதிகமான நோயாளிகளுக்கு சேவை வழங்கப்பட்டுள்ளது. இந்த சேவையின் மிகப்பெரிய பயனாளியாக தமிழகம் விளங்குகிறது. தமிழகத்திலிருந்து வந்த 10 லட்சத்திற்கும் மேற்பட்ட அழைப்புகளுக்கு இந்த சேவை மூலம் பதில் அளிக்கப்பட்டுள்ளது. பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான மத்திய அரசு, தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் எப்போதும் செய்து கொண்டிருக்கிறது. அதேபோல, தமிழக அரசும் அனைத்து மாவட்டங்களுக்கும், கொரோனா தடுப்பூசி மற்றும் பிற சேவைகளை பாரபட்சமின்றி வழங்க கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
 

click me!