மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 5 சதவீதம் உயர்வு ;...!! ஒரு கோடிக்கும் அதிகமானோர் பயன்பெறுவார்கள் ..!!

By Ezhilarasan BabuFirst Published Oct 9, 2019, 5:09 PM IST
Highlights

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலப்படி 17 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 65 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியதார்கள் என மொத்தம் ஒரு கோடிக்கும் அதிகாமானோர் பயன் பெறுவார்கள். இதற்கு முன் மத்திய அரசு ஊழியர்கள் 12 சதவீதம் அகவிலைப்படி பெற்றுவந்த நிலையில், பண்டிகை காலத்தை முன்னிட்டு அகவிலைப்படி 5 சதவீதம் உயர்த்தப்பட்டு 17 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 5 சதவீதம் உயர்த்தி வழங்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலப்படி 17 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 65 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியதார்கள் என மொத்தம் ஒரு கோடிக்கும் அதிகாமானோர் பயன் பெறுவார்கள்.

இதற்கு முன் மத்திய அரசு ஊழியர்கள் 12 சதவீதம் அகவிலைப்படி பெற்றுவந்த நிலையில், பண்டிகை காலத்தை முன்னிட்டு அகவிலைப்படி 5 சதவீதம் உயர்த்தப்பட்டு 17 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த 17சதவீதம் என்பது ஜூலை மாதம் முன்தேதியிட்டு வழங்கப்படும் என அரசின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் டெல்லியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், " மத்திய அரசு ஊழியர்களுக்கு வழக்கமாக ஒருசதவீதம் முதல் 3 சதவீதம் வரை மட்டுமே அகவிலைப்படி உயர்த்தப்படும். ஆனால், பிரதமர் மோடி தலைமையிலான 5 சதவீதம்வரை ஒரேநேரத்தில் உயர்த்தியுள்ளது.  இந்த உயர்வால் மத்திய அரசுக்கு ரூ.16ஆயிரம் கோடிகூடுதலாக செலவாகும். 

இந்த முடிவால் மத்திய அரசின் 62 லட்சம் ஓய்வூதியதாரர்கள், 50 லட்சம் ஊழியர்கள்கள் பயன்பெருவார்கள். இந்த அறிவிப்பு தீபாவளி நேரத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரும் உற்சாகத்தை அளிக்கும். இந்த அகவிலைப்படி உயர்வு ஜூலை மாதத்தை முன்தேதியிட்டு கணக்கிட்டு வழங்கப்படும் " எனத் தெரிவித்தார்

click me!