கொரோனாவை பரப்பும் கேந்திரமாக உருவெடுத்த மத்திய அரசு நிறுவனங்கள்.. உதாரணமாக மாறிய சாலிகிராமம் இந்தியன் வங்கி..!

By Thiraviaraj RMFirst Published Apr 30, 2021, 2:45 PM IST
Highlights

பணியை செய்யுங்கள்... பொதுமக்களின் பாவத்துக்கு ஆளாகாதீர்கள். நீங்கள் வாங்கும் சம்பளம் பொதுமக்களின் சேவைக்காக. பாவத்துக்காக இருந்தால் நாளை நீங்களும் வேறொரு நோய்க்கு ஆட்படலாம். எச்சரிக்கை. 

’’ஓர் இடத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட கூடாது என்றால் என்ன செய்ய வேண்டும்? பஸ் என்றால் கூடுதல் பஸ் இயக்க வேண்டும் . வங்கி என்றால் வேலை நேரத்தை அதிகரிக்க வேண்டும் ..: இரவு 10 மணிக்கு மேல் பஸ் ஓடாது என அறிவித்து விட்டீர்கள்.  கடைசி பஸ்சில் 200 பேர் பயணம் செய்கின்றனர்.  வங்கிகளில் 2 மணிக்கு பூட்டிவிடுவார்கள் என 100 பேர் மூச்சு முட்டி வரிசையில் நிற்கின்றனர். ஞாயிறு மட்டும்  ஊரடங்கு அதனால்  சனிக்கிழமை  பலசரக்கு ( சரக்கு) கடைகளில் இரவு 9 மணிக்கு மக்கள் முண்டியடிக்கின்றனர். இந்த கட்டுபாடுகளால் கொரோனா கூடுதல் பரவ தான் வாய்ப்பு. இப்படி உத்தரவு போடத்தான்  உங்கள் IAS - I.P.S  மூளை வேலை செய்கின்றதா? AC காரில்  கருப்பு கண்ணாடி ஏற்றி விட்டு தலைமை செயலகத்தில் இருந்து உத்தரவு போடாமல் பொதுமக்களுடன் மக்களாய் வீதியில் இறங்கி ஆய்வு செய்து ஆட்சியாளர்களுக்கு ஆக்கப்பூர்வமான யோசனை சொல்லுங்கள். மாதம் 3 லட்சம் சம்பளம் வாங்கும்  I.A.S களே பூம்பூம்  மாடு போல் தலையாட்டினால் கொரோனாவும். ஒழியாது உங்கள் சம்பளமும் உடலில் சேராது.’’ இப்படியெல்லாம் அரசு நிர்வாகங்களை கறித்துக் கொட்டி வாட்ஸ்-ஆப்பில் ஸ்டேட்டஸ் பரப்பப்படுகிறது.

இதன் உண்மை நிலைமைதான் என்ன என்பதை அறிய சென்னை, சாலிகிராமம் , அருணாச்சலம் சாலையில் உள்ள இந்தியன் வங்கிக்கு நேரடி கள ஆய்வுக்கு சென்றோம். (குறிப்பாக அந்த வங்கியின் சேவை குறித்து அப்பகுதி மக்கள் பலரும் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்கிற குற்றச்சாட்டும் நிலவுகிறது) அந்த இந்தியன் வங்கியில் வெளியில் இருந்து உள்ளே வாடிக்கையாளர்களை மொத்தமாக அனுப்புவதில்லை. அனைவரும் வெளியில் நின்று காய்ந்து கொண்டிருந்தனர். ஏற்கெனவே இருந்த பணம் டெபாசிட் செய்யும் இயந்திரத்தையும் எடுத்து விட்டார்கள். 

இதனை அறியாத அந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் வந்து வந்து ஏமாந்து செல்கின்றனர். இதெல்லாம் ஒருபுறமிருக்க, வங்கி சேவை அங்கு அத்தனை ஊழியர்கள் இருந்தும் சுத்தமாக நடைபெறவில்லை என்பது தெரிய வந்தது. 5 கவுண்டர்கள் உள்ள அந்த வங்கியில் 1 கவுண்டர் மட்டுமே செயல்பட்டது. அதிலும், 15 நிமிடங்களுக்கு ஒரு வாடிக்கையாளர்களை உள்ளே அனுப்புகிறார்கள். மீதமுள்ள அதிகாரிகள் ஒட்டுமொத்தமாக நின்று கும்மியடித்துக் கொண்டிருந்தார்கள். வாடிக்கையாளர்கள் வெளியில் கூடி கோரோனா பீதியிலும், கடும்வெயிலிலும் வேதனையுடன் நின்றிருந்தார்கள். தனிமைப்படுத்திக் கொள்ள சொல்லும் அரசு, இடைவெளியை கடைபிடிக்கச் சொல்லும் அரசு, எதற்காக ஊரடங்கை பிறப்பிக்கச் சொன்னதோ அதனை கடைபிடிக்காமல், தங்களது கடமையை உணராமல் இருக்கு அரசு அதிகாரிகாளை அவர்களது கடமையை கடைபிடிக்க கடுமையாக உத்தரவிடவேண்டும். 

அரசு அதிகாரிகள், அரசின் கட்டுப்பாட்டில் உள்ளவர்கள் கடமையை உணராமல்  போனால், சாதாரண மக்கள் எப்படி உணர்வார்கள்.? அரசின் சம்பளத்தில் ராஜபோக வாழ்கை நடத்தும் நீங்கள் கடமையை காற்றில் பறக்கவிட்டால், அன்றாடம் காய்சிகளாக, அவசரத்திற்கு பணம் அனுப்ப தங்களது வங்கிகளுக்கு வரும் மக்களை மதிக்க வேண்டாம், அவர்களை ஓன்று சேர்த்து, கொரோனா பரவல் மையமாக மாற்ற முயற்சி செய்யாதீர்கள்’’ என இயலாமையில் கொந்தளிக்கிறார்கள் அந்த வங்கியின் ஏழைப்பட்ட வாடிக்கையாளர்கள்.


மக்களை இப்படி ஓரிடத்தில், குவிய வைத்து, குமுற வைத்த அந்த வீடியோ எடுத்த நம்மை மிரட்டினார்கள். அந்த வீடியோ இதோ..."

பணியை செய்யுங்கள்... பொதுமக்களின் பாவத்துக்கு ஆளாகாதீர்கள். நீங்கள் வாங்கும் சம்பளம் பொதுமக்களின் சேவைக்காக. பாவத்துக்காக இருந்தால் நாளை நீங்களும் வேறொரு நோய்க்கு ஆட்படலாம். எச்சரிக்கை. இப்போது பலரும் பதிவிட்டு இருந்த ஷேர் செய்த அந்த முதல் பாராவில் பதிவிட்ட வாட்ஸ்- அப் பதிவை படியுங்கள் உண்மை நிலவரம் இதுதான் என்பது புரியும்.

click me!